மேலும் அறிய

"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்

புனேவில் இளம்பெண் ஒருவரை அவருடன் வேலை செய்து வந்த சக ஊழியரே கொலை செய்துள்ளார். பொய் சொல்லி பணம் பெற்றதாகவும் பின்னர், வாங்கிய பணத்தை திருப்பி தராததால் அந்த பெண்ணை பட்டப்பகலில் வைத்து கொலை செய்தார்.

புனேவில் தனியார் அலுவலகத்தின் பார்க்கிங்கில் வைத்து இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொய் சொல்லி பணம் பெற்றதாகவும் பின்னர், வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்த நிலையில், அந்த பெண்ணை பட்டப்பகலில் வைத்து சக ஊழியரே கொலை செய்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளம்பெண் ஒருவரை அவருடன் வேலை செய்து வந்த சக ஊழியரே கொலை செய்துள்ளார். எரவாடாவில் WNS குளோபல் எனும் BPO நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணா கனோஜா. இவருக்கு வயது 30.

புனேவில் பட்டப்பகலில் கொடூரம்:

இவரது சக ஊழியரான சுபதா கோதாரே (28 வயது), தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி, கிருஷ்ணாவிடம் பலமுறை கடன் வாங்கினார். கொடுத்த பணத்தை கிருஷ்ணா திரும்பக் கேட்டபோது, ​சுபதா தனது தந்தையின் நிலையைக் காரணம் காட்டி பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார்.

சுபதா சொல்வது உண்மையா என தெரிந்து கொள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் கிருஷ்ணா. அங்கு, அவரது தந்தை நலமாக இருப்பதையும், உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதையும் அவர் கண்டறிந்தார்.

செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில், சுபதாவை அவர்களது அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்து அவரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார் கிருஷ்ணா. அதற்கும் சுபதா மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சுபதாவை அவர் கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

வேடிக்கை பார்த்த மக்கள்:

வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பலர் சுபதா தாக்குவதைக் கண்டனர். ஆனால், அவரைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. அவர்களில் சிலர் இந்த செயலை வீடியோவில் பதிவு செய்தனர். கடும் காயம் அடைந்த அந்தப் பெண் தரையில் விழுந்த பிறகுதான், அங்கிருந்த மக்கள் கிருஷ்ணாவை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "முழங்கையில் பலத்த காயம் அடைந்த சுபதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

இதையும் படிக்க: Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget