மேலும் அறிய

Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்

Ajithkumar Car Accident: அஜித்குமார் கார் ரேஸில் விபத்தில் இருந்து எப்படி உயிர் தப்பினார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித்குமார். நடிகராக மட்டுமின்றி புகைப்பட கலைஞர், துப்பாக்கிச் சுடும் வீரர் என பன்முகத் திறன் கொண்டவராக திகழ்கிறார். இவையனைத்தையும் கடந்து அஜித்குமார் அடிப்படையில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தய வீரர் ஆவார். 

விபத்தில் சிக்கிய அஜித்:

நீண்ட வருடங்களாக அதில் இருந்து விலகிய அஜித்குமார் தற்போது மீண்டும் தனது கார் பந்தய களத்திற்கு திரும்பியுள்ளார். துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் என்ற அவரது அணி பங்கேற்க உள்ளது. 

இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் பயிற்சிக்காக துபாயில் ஈடுபட்டிருந்தபோது அவரது கார் தடுப்பில் மிக கடுமையாக மோதி விபத்திற்குள்ளாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக அஜித்குமார் உயிர் தப்பினார். அஜித் இந்த விபத்தில் எப்படி உயிர் தப்பினார்? என்று பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார். 

உயிர் தப்பியது எப்படி?

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, இந்த ரேஸ் காரில் ஹேன்ஸ் என்ற பாதுகாப்பு அம்சம் இருக்கும். அதாவது, HAND NECK SAFETY SYSTEM உள்ளது. இது ஒரு ரிங் போல இருக்கும். இந்த ரிங் சீட்டில், சீட் பெல்டுடன் இருக்கும். இதுபோன்று விபத்து நடந்தால் தலை, கழுத்தில் அடிபடாமல் இது தடுக்கும். தலையில் காயம், கழுத்து காயம், விப்லாஷ் ஆகியவை ஏற்படாது. 

அந்த ஹெல்மெட்டும், இந்த HAND NECK SAFETY SYSTEM உடன் இணைந்திருக்கும். இதனால், தலையில் ஏற்படும் காயம் தவிர்க்கப்படும். மேலும், இந்த ரேஸ் கார்களில் விபத்து ஏற்பட்டால் எளிதில் வெளியில் வருவதற்கு easy ejection என்ற ஒரு  அமைப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தீ கட்டுப்பாட்டு ஏற்பாடும் இருக்கும். இந்த காரணங்களால்தான்  அஜித்குமார் உயிர் தப்பினார். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இருப்பினும். அவர் தற்போது நலமுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.  

கார் ரேஸில் தீவிரமாக அஜித்:

நடிகர் அஜித் 2000 காலகட்டங்களில் ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டார். பின்னர். ரேஸ் பந்தயத்திற்கு தற்காலிக ஓய்வு கொடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில், மீண்டும் அஜித் கார் பந்தயத்திற்கு திரும்பியுள்ளார். அஜித்குமார் ஏற்கனவே பார்முலா கார் பந்தயங்கள் பலவற்றில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வராது என்று அறிவிக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சித்திரைத் திருநாள் கொண்டாட்டமாக ஏப்ரல் 10ம் தேதி  குட் பேட் அக்லி படம் ரிலீசாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget