மும்பை கொடூர கொலை வழக்கில் திருப்பம்... கொலை நடப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பே விஷம் வாங்கியது அம்பலம்...காவல்துறை அதிர்ச்சி தகவல்..!
குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் சானேவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 56 லயதான மனோஜ் சானே என்பவர், தனது லின் இன் பாட்னரான சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரின் உடலை அப்புறப்படுத்த துண்டு துண்டாக வெட்டியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மும்பை கொடூர கொலை வழக்கில் புதிய திருப்பம்:
மேலும் சில உறுப்புகளை சமையலறையில் குக்கரிலும் வேகவைத்து சமைத்து நாய்களுக்கு போட்டுள்ளார். மேலும், மற்ற உறுப்புகளை வறுத்தும், மிக்சியில் அறைத்தும் அதனை வாளிகளில் அடைத்துள்ளார்.
இதனால் துர்நாற்றம் வீசியதை அக்கம் பக்கத்தினர் அறிந்ததும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் சானேவை கைது செய்துள்ளனர். பின்னர், உடல் உறுப்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் சானேவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டதாக மனோஜ் சானே முன்னதாக தெரிவித்திருந்தார். இது வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
திட்டமிட்ட கொலையா..?
ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் சானே தெரிவித்த கருத்தை வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். கொலை நடப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பே, பொரிவலி பகுதியில் அமைந்துள்ள மருந்து கடை ஒன்றில் இருந்து மனோஜ் சானை விஷம் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே, இது திட்டமிட்ட கொலை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மனோஜ் சானே அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, "நான் சரஸ்வதி வைத்யாவைக் கொல்லவில்லை. விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 3 அன்று, நான் வீடு திரும்பியபோது, சரஸ்வதி தரையில் படுத்திருந்தாள்.
காவல்துறை அதிர்ச்சி தகவல்:
அவரின் வாயிலிருந்து நுரை தள்ளியது. நான் அவரை சோதித்தேன். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். கைது செய்வதிலிருந்து தப்பிக்க, நான் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினேன்" என்றார்.
மேலும், "தனக்கு எச்.ஐ.வி. நோய் பாதிக்கபட்டிருப்பதால் நாங்கள் இருவரும் ஒருபோதும் உடலுறவு கொண்டதே இல்லை என்றும் சரஸ்வதி எனது மனைவி” என்றும் குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், இந்த வாக்குமூலத்தை மறுத்துள்ள விசாரணை அதிகாரிகள், "சானே அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்திருக்கலாம் அல்லது அவரது டலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு முன்பு விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம்" என்றனர்.