மேலும் அறிய
Advertisement
Today Headlines: உள்ளூர் தொடங்கி.. உலகம் வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ..!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் ரூபாய் 200-க்கு விற்கப்படும் தக்காளி; சாமானியர்கள் அவதி
- இன்றுமுதல் தமிழ்நாடு முழுவதும் 500 நியாய விலைக்கடைகளில் கிலோ ரூபாய் 60-க்கு தக்காளி விற்பனை - அமைச்சர் பெரிய கருப்பணன்
- பெண்கள் பாதுகாப்பாக தங்க தோழி விடுதியை துவங்கியுள்ளோம்; கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பேச்சு
- பட்டியல் இனத்தவருக்கான நிதியை மகளிர் உரிமைத் தொகைக்கு ஒதுக்குவதா? சமூக நீதிக்கு திமுக பெரும் பிழை இழைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்
- சென்னை தாம்பரம் ஊரப்பாக்கம் அருகே சோட்டா வினோத், ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் பரபரப்பு
- ஆதி திராவிடர் துணை திட்ட நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்துவதாக கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை; ஆதி திராவிடர் துணை திட்ட நிதி குறித்த வதந்திக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்
- தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்
- சுருக்குமடி வலைகளை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தல்; மயிலாடுதுறையில் மீனவ கிராம மக்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்
- திருப்பூரில் வியாபாரியிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களிடம் 16 லட்சம் மீட்பு
- பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதோர் நுழையத்தடை என்ற பலகையை மீண்டும் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- என்.எல்.சி மூன்றாவது சுரங்கப்பாதையை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் கோரிக்கை; தமிழ்நாடு அரசு இதுகுறித்து இந்த கோரிக்கையும் வைக்கவில்லை என மத்திய அரசு பதில்
- என்.எல்.சி முத்தரப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி; சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம்
இந்தியா:
- பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது சந்திரயான்-3 விண்கலம்; இஸ்ரோ அறிவிப்பு
- மகாராஸ்ட்ராவில் பால கட்டுமானப் பணியின்போது கிரேன் சரிந்து விபத்து; 14 பேர் உயிரிழப்பு; 6 பேரை தேடும் பணி தீவிரம்
- மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குறுகிய கால விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்; விதி 267இன் கீழ் முழுவிவாதம் நடத்தவும்; பிரதமர் விளக்கம் அளிக்கவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தல்
- மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை; இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
- மணிப்பூர் விவகாரத்தை விசாரிப்பது கடினம்; இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதாக உச்சநீதிமன்றம் கருத்து
- மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய தாமதம் ஏன்? - உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வி
- ஹரியானாவில் விஷ்வ ஹிந்து பர்ஷித் ஊர்வலத்தில் கலவரம்; 2 ஊர் காவல்படையினர் உயிரிழப்பு
உலகம்
- இலங்கையில் வறட்சி காரணமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
விளையாட்டு
- தொடரை வெல்வது யார்? வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது
- கேப்டனாக ரீ-எண்ட்ரி கொடுத்த பும்ரா; அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் பும்ரா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
- ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சுக்குநூறாக நொறுக்கித்தள்ளிய இங்கிலாந்து; 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion