Gaganyaan Mission: ககன்யான் சோதனை: ’பக்கா safe’...எஸ்கேப் மாட்யூலை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை!
ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக வானில் ஏவப்பட்ட மாதிரி விண்கலத்தை இந்திய கடற்படை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Gaganyaan Mission: ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக வானில் ஏவப்பட்ட மாதிரி விண்கலத்தை இந்திய கடற்படை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ககன்யான் சோதனை:
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மீது இஸ்ரோ தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை விண்கலமான (டிவி-டி1) என்ற ஒற்றை-நிலை திரவ ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமானது. அதேநிலை தொடர்ந்ததால், பரிசோதனை முயற்சி 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு அடையாளம் காணப்பட்டு சரி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சரியாக 10 மணியளவில் டிவி-டி1 எனும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோவின் பரிசோதனை வெற்றி:
டிவி-டி1 என்ற ஒற்றை-நிலை திரவ ராக்கெட் திட்டமிட்டபடி சரியாக 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலம் 11.8 கிமீ உயரத்தை எட்டியபோது க்ரூ ஒலியை விட அதிவேகமாக அதவாவது மேக் எண் 1.25 வேகத்தில் பயணிக்க தொடங்கியது. விண்ணில் செலுத்தப்பட்ட 61.1 விநாடிகளுக்குப் பிறகு 11.9 கிலோ மீட்டர் உயரத்தில் ஒலியை காட்டிலும் அதிக வேகத்தில் அதாவது மேக் எண் 1.21 வேகத்தில் விண்கலம் பயணித்தது. அப்போது ராக்கெட் பூஸ்டரிலிருந்து க்ரூ எஸ்கேப் சிஸ்டம் வெளியேறியது.
பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை:
இதையடுத்து 16.9 கிலோ மீட்டர் உயரத்தில் க்ரூ மாட்யூல் எனப்படும் மனிதர்கள் அமரக்கூடிய பாகம், க்ரூ எஸ்கேப் சிஸ்டத்திலிருந்து தனியாக பிரிந்தது அங்கிருந்து மணிக்கு 550 கிலோ மீட்டர் வேகத்தில் க்ரூ மாடுலே புவியை நோக்கி பயணிகக் தொடங்கியது. பின்பு பாரசூட் உதவியுன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு க்ரூ மாட்யூல் திட்டமிட்டபடி கடலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
Indian Navy Units recover the Crew Escape Module of Gaganyaan mission after a successful test flight was conducted by ISRO today
— ANI (@ANI) October 21, 2023
Our units recovered the crew module - a path paved by extensive planning, training of Naval divers, formulation of SOPs and joint communication by… pic.twitter.com/RwDriqA1ql
கடலில் தரையிறங்கய க்ரூ மாட்யூல் இந்திய கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படத்தையும் இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை மீட்டுள்ள க்ரூ மாட்யூல் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

