Breaking News LIVE, July 28: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான லேட்டஸ்ட் தகவல்களை, உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏபிபி செய்தி இணைய செய்திதளத்துடன் இணைந்திருங்கள்.
LIVE
Background
- புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு - மக்களின் கொந்தளிப்பிற்கு பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
- திருப்பூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி ஆதரவாளர் குற்றம்சாட்டியதால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறினார் - ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை
- ஈவிகேஎஸ்.இளங்கோவன்-கார்த்தி சிதம்பரம் மோதல்: முற்றுகிறது வார்த்தை போர், வருத்தத்தில் மூத்த தலைவர்கள்
- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தில் நடக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
- பவானிசாகர் அணைக்கு அணக்கு நீர்வரத்து 8,427 கனஅடியில் இருந்து 6,873 கன அடியாக குறைவு
- அரசு போக்குவரத்து கழகங்களில் பொதுமேலாளர்கள் 5 பேர் பணியிட மாற்றம்
- சென்னை பூந்தமல்லி அருகே ரசாயனம் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி தீடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றியது
- 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் - பஞ்சாப் ஆளுநர் பன்சாரி லால் புரோகித்தின் ராஜினாமா ஏற்பு
- மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்
- டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம் - 3 மாணவர்கள் உயிரிழந்த சோகம்
- மாநில காவல்துறையில் அக்னிபாத் வீரர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு - ராஜஸ்தான், அருணாச்சலபிரதேச மாநில அரசுகள் அறிவிப்பு’
- எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு பாக். தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ராணுவ வீரர் பலி: கேப்டன் உட்பட 4 பேர் காயம்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ் - சாதகமாக மாறும் கருத்து கணிப்புகள்
- இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் - அமெரிக்காவில் இருந்து உடனடியாக நாடு திரும்புகிறார் நேதன்யாகு
- வெளிநாடுகளில் படித்து வருவோரில் 5 ஆண்டில் 633 இந்திய மாணவர்கள் பலி: அமெரிக்காவில் இருந்து 48 பேர் நாடு கடத்தல்
- பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி - ஆடவர் ஹாக்கி அணி முதல் போட்டியில் வெற்றி
- மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஃபைனல் - இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை
- இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
“பாஜக கூட்டணியால் எங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காட்டம்.
புதுச்சேரியில் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்துள்ளது. சமாதானம் பேசச் சென்ற பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் “பாஜக கூட்டணியால் எங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காட்டம்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். குறுவை பயிர் சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.
சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர்கள். வாயில் நுழைய கூட மாட்டேங்குது - அமைச்சர் சிவசங்கர்
"புதிய குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் நம் வாயில் நுழையகூட மாட்டேங்குது. ஏதோ சங்கீதா-னு மட்டும் நினைவுல இருக்கு" சென்னையில் நேற்று நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருஞ்சைட்டை விருது வழங்கும் விழாவில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - முதல் தகுதிச் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - முதல் தகுதிச் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது.
இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்