Breaking News LIVE, Aug 10: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
Breaking News LIVE, Aug 10: உலக நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
LIVE

Background
Breaking News LIVE, Aug 10: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
Breaking News LIVE, Aug 10: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 10, 2024
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/J5aM3VK8aR
Breaking News LIVE, Aug 10: கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி
Breaking News LIVE, Aug 10: கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவு ஏற்பட்டதில் இருந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணித்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE, Aug 10: இரவு 7 மணிக்குள் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE, Aug 10: இன்று இரவு 7 மணிக்குள் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 10, 2024
Breaking News LIVE: வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா? இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு
வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப்போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப்போட்டிக்கு முன் எடை பார்த்தபோது 50 கிலோவை விட 100 கிராம் கூடுதலாக எடை இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Mufasa: The Lion King ட்ரெய்லர் வெளியானது!
Mufasa: The Lion King ட்ரெய்லர் வெளியானது!
டிஸ்னியின் D23 நிகழ்வில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டது!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

