Lalu Prasad Yadav : லல்லு உடல்நிலையில் சிக்கலா..? இன்று மாலை டெல்லி பயணம்... முழு செலவையும் ஏற்ற அரசு..
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேஜஸ்வி யாதவிடம் தொலைபேசியில் பேசி அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு காரணமாக பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட இருக்கிறார் என தெரிவித்தார்.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த 74 வயதான லாலு பிரசாத்யாதவ், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் உள்ள தனது வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பராஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
राजद प्रमुख श्री लालू प्रसाद यादव जी से पटना स्थित पारस अस्पताल में मुलाकात कर उनके स्वास्थ्य की जानकारी ली। श्री लालू प्रसाद यादव जी के जल्द स्वस्थ होने की कामना है। pic.twitter.com/Y1zTABnDCo
— Nitish Kumar (@NitishKumar) July 6, 2022
இதுகுறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவிக்கையில், ”லாலுவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். நாங்கள் ஒரு காலத்தில் பழைய நண்பர்கள். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தன் தந்தையின் உடல்நலம் குறித்து தெரிவிக்கையில்,"அவரது சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அனைவருக்கும் தெரியும்; டெல்லியில் சிகிச்சை நடந்து வருகிறது. அந்த மருத்துவர்களிடம் அவரது மருத்துவ வரலாறு உள்ளது, அதனால்தான் அவரை அங்கு அழைத்துச் செல்கிறோம்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைனும் லாலு பிரசாத் யாதவை சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேஜஸ்வி யாதவிடம் தொலைபேசியில் பேசி அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்