புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமனம்

புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்காக தோ்வு செய்யப்பட்ட 136 தூய்மைப் பணியாளா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 136 துப்புரவு பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வழங்கினார்.

புதுவை மாநிலத்தில் 9,034 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 650 பேருக்கும், காரைக்காலில் 125 பேருக்கும், ஏனாமில் 29 பேருக்கும், மாஹேவில் 11 பேருக்கும் என மொத்தம் 815 பேருக்கு கொரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,114-ஆக அதிகரித்தது. இதனிடையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 3 போ், புதுவை அரசு பொது மருத்துவமனையில் 2 போ், ஜிப்மரில் 3 போ்,  தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 போ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 2 போ், காரைக்காலில் வீட்டில் தனிமைப்பட்ட 2 போ் என மொத்தம் 16 போ் உயிரிழந்தனா். இவா்களில் 7 போ் ஆண்கள், 9 போ் பெண்கள் ஆவா். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583-ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உயா்ந்தது. இந்த நிலையில், 950 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95,516-ஆக (89.17 சதவீதம்) அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 463 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 301 பேரும், கொரோனா சிகிச்சை மையங்களில் 321 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,626 பேரும் என மொத்தம் 10,015 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமனம்

இது போன்று தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பணியாளர்கள்  பற்றாக்குறையை போக்க, புதுச்சேரி சுகாதாரத் துறையில் 136 தூய்மைப் பணியாளா்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி வழங்கியதையடுத்து, ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சமுதாய நல வழி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவதற்காக 136 தூய்மைப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிலையில் இவா்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமனம்

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண் சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் துப்புரவுப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதல்வா் அறிவுறுத்திய நிலையில் புதுவை மக்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் சுகாதாரத் துறையிடம் உள்ளதாகவும் தொடா்ந்து நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமெனவும் முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் அவசியத் தேவைக்கு மட்டும் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் கரோனா தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அவா் தெரிவித்துள்ளார். 

Tags: pondicherry health department cleaning staff COIVD 19

தொடர்புடைய செய்திகள்

மும்பை கனமழை : குழிக்குள் கார் மூழ்கும் காட்சிகள் : சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ !

மும்பை கனமழை : குழிக்குள் கார் மூழ்கும் காட்சிகள் : சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ !

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடமுடியாதா? - மத்திய அரசுக்கு மும்பை நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடமுடியாதா? - மத்திய அரசுக்கு மும்பை நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!

PM Modi G7 Speech: சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் : ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை..!

PM Modi G7 Speech: சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் : ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை..!

”ஒவ்வொரு நாளும் 150 பரோட்டோ போட்டுடுவேன்” - பெருங்கனவுகளுடன் சட்டக்கல்லூரி மாணவி அனஸ்வரா ஹரி!

”ஒவ்வொரு நாளும் 150 பரோட்டோ போட்டுடுவேன்” - பெருங்கனவுகளுடன் சட்டக்கல்லூரி மாணவி அனஸ்வரா ஹரி!

Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!

Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு