மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இன்று 3ம் கட்ட மக்களவை தேர்தல்.. பாஜகவை விமர்சித்த ராகுல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி; திருப்பூர் மாவட்டம் முதலிடம்
- நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடியபோது கடலில் முழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் உயிரிழப்பு; 3 பேர் உயிருடன் மீட்பு
- ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
- நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்தில் தொடரும் மர்மம்; முன்னாள் மத்திய அமைச்சர், அரசு மருத்துவரிடம் விசாரணை
- தமிழ்நாட்டில் வரும் 8-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை ஆயிரம் விளக்கில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் - வானிலை ஆய்வு மையம்
- அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே 13 முதல் ஜூன் 30 வரை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
- உதகை, கொடைக்கானலுக்கு சென்றுவர இ-பாஸ் நடைமுறைய அமல்படுத்த உயர்நீதிமன்ற உத்தரவு.
- கொடைக்கானலில் முதல்நாளில் 15, 945 வாகனங்களுக்கு வெவ்வெறு தேதிகளில் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
- லால்குடி அருகே ரயிலில் பயணம் செய்த இளைஞர், தவறி கீழே விழுந்து படுகாயம்.
- தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு ஒருவாரத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இந்தியா:
- குஜராத் ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கியதால் சர்ச்சை.
- தற்போது நடைபெறுவது சாதாரண தேர்தல் அல்ல, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான தேர்தல் - காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கடிதம்.
- டெல்லி திலக் நகரில் கார் ஷோரூமில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு.
- மேகாலயா மாநிலம் துராவில் நள்ளிரவு 12.17 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது
- ஜார்க்கண்டில் அமைச்சரின் செயலாளர் பணியாளரிடம் ரூ. 30 கோடி பறிமுதல்
- மக்களவௌ 3ம் கட்ட தேர்தல்: 93 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு; பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் வாக்களிக்கிறார்கள்
- 400 சீட் எல்லாம் வாய்ப்பே இல்லை, 150 இடங்களை கூட பாஜக தாண்டாது - ராகுல் காந்தி உறுதி
உலகம்:
- இந்தோனேசியாவின் சீரம் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.
- காசாவில் போர் நிறுத்தத்திற்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு.
- தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு.
- நாகை- காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து 13ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது என இந்திய தூதரகம் தகவல்.
- அல் ஜசீரா செய்தி நிறுவனம் தங்கள் நாட்டில் செயல்பட இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- ஐபிஎல் 2024: இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி.
- சவுதி அரேபியாவில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், உலக தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் மேன்யுவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion