மேலும் அறிய
Tamilnadu Roundup: ரூ.67 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை, ரம்ஜான் கொண்டாட்டம், வங்கிகள் மூடல்? - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவும் முதல் கட்டண உயர்வு அமல் - கூடுதலாக 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம்
- கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா முடிவே இறுதி, எந்தக் கட்சி மீதும், தலைவர் மீதும் கோபம் இல்லை எனவும் அண்ணாமலை பதில்
- சென்னை மாநகராட்சியில் சொத்து மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது - வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
- வங்கிகளுக்கு இன்று விடுமுறை இல்லை... வழக்கம் போல் செயல்படும் - ஆர்பிஐ அறிவிப்பு
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பள்ளிவாசல்களில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
- தியாகராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூரில் ஏப்ரல் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
- நேற்று வரை நடிகர்.. கூட்டரங்கில் மட்டும் பேசுகிறார்.. ஏதோ அமைதியாக இருக்கிறோம் என்று நினைக்காதீங்க - அமைச்சர் கே.என்.நேரு..
- புதிய உச்சத்தை அடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனையாகிறது
- ரமலான்பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை - வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சி
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாக தகவல்
- திருச்சி - யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ நிறுவனம்..! யாழ்ப்பாணம் சென்றடைந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் உடன் உற்சாக வரவேற்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















