Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Box Office Collection : அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 21 நாட்களில் ரூ 1705 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது
புஷ்பா 2
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்திற்கு வருகைத் தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். ஒரு பக்கம் புஷ்பா 2 திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வந்தாலும் இன்னொரு பக்கம் அல்லு அர்ஜூன் கைது , நீதிமன்ற விசாரணை என சர்ச்சை நீண்டு கொண்டு சென்றது.
இத்தனை கலவரத்திற்கு மத்தியிலும் புஷ்பா 2 படத்தின் வசூலில் எந்த வித பாதிப்பும் இல்லை. புஷ்பா 2 படத்தின் 21 நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் புஷ்பா 2 திரைப்படம் 1705 கோடி வசூல் செய்துள்ளது
THE HIGHEST GROSSER OF INDIAN CINEMA IN 2024 continues to topple records 💥😎
— ALLu SAi (@ALLuSAi62638207) December 26, 2024
Pushpa 2 The Rule is the FASTEST INDIAN FILM EVER to collect 1700 CRORES with a gross of 1705 CRORES WORLDWIDE in 21 days ❤️🔥🔥🪓🐉 pic.twitter.com/8MgV3iE2K4