மேலும் அறிய

விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?

ரஷிய நாட்டின் ஏவுகணை தற்செயலாக அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம் என ராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

கசகஸ்தானில் நேற்று அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷிய நாட்டின் ஏவுகணை தற்செயலாக அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் இருந்து ரஷியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு 67 பயணிகள், விமானக் குழுவினர் 5 பேர் என மொத்தம் 72 பேருடன் விமானம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. கசகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையம் அருகே சென்றபோது அவசரமாக தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.

அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?

ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில், 38 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 29 பேர் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த விமான விபத்து குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷிய நாட்டின் ஏவுகணை தற்செயலாக அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம் என ராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

விபத்தில் சிக்கிய விமானத்தின் முக்கிய பகுதிகளில் ஓட்டைகள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், யூரோநியூஸ் மற்றும் செய்தி நிறுவனம் ஏஎஃப்பி உள்ளிட்டவை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கின்றன.

விபத்தா? திட்டமிட்ட சதியா?

விழுந்து சிதறிய விமானத்தின் பாகங்களில் ஏவுகணை தாக்கியது போன்ற சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ரஷிய குடியரசின் ஒரு பகுதியாக இருக்கும் செச்சினியாவின் தலைநகரான க்ரோஸ்னிக்கு அந்த விமானம் சென்றிருக்கிறது.

ட்ரோன்கள் மூலம் உக்ரைன் அடிக்கடி தாக்குதல் நடத்தும் பகுதியாக க்ரோஸ்னி உள்ளது. ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய இலக்காக க்ரோஸ்னி இருக்கிறது.

ரஷியாவின் ராணுவ செய்திகளை வெளியிடும் யூரி பொடோல்யாகா என்ற ப்ளாக்கர், இதுகுறித்து பேசுகையில், "விமானத்தின் இடிபாடுகளில் காணப்படும் (புகைப்படங்கள்) துளைகள் ஏவுகணை ஏற்படுத்திய சேதத்தைப் போலவே இருந்தன. அந்த விமானத்தை ஏவுகணை தற்செயலாக தாக்கப்பட்டிருக்கலாம்" என்றார்.

இதையும் படிக்க: Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
ABP Premium

வீடியோ

தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
iPhone 17e Leaked Specs.,: இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Embed widget