மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: சூட்டைக் கிளப்பும் தேர்தல் களம்; உங்களைச் சுற்றி நடப்பது என்ன? தலைப்புச் செய்திகள் இதோ
7 AM Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாடு:
- தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிடம் இருந்து எப்படி தண்ணீர் பெறுவது என்பது எங்களுக்கு தெரியும் - அமைச்சர் துரைமுருகன்
- குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
- பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான குஷ்புவின் கருத்துக்கு நடிகை அம்பிகா கண்டனம்
- இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரணாக உள்ளது எனவும் மக்களுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி எனவும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் முன்னிலையில் ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என சட்டமன்ற செயலகம் அறிவிப்பு. விரைவில் அமைச்சர் பொறுப்பேற்க முதலமைச்சர் பரிந்துரை
- அமைச்சராக பொன்முடி இன்று பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி டெல்லி பயணம்; 16ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.
- இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - மார்ச் 15ஆம் தேதி வரை இருந்த கால அவகாசம் மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு
- பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு; அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குபதிவு
இந்தியா:
- நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
- மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் மொத்தம் 72 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.
- குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது பாரதிய ஜனதா கட்சியின் மோசமான வாக்கு வங்கி அரசியல் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்
- பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் குறித்து நாளை ஆலோசனை கூட்டம்
- அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு; படிப்பை முடித்துவிட்டு நாட்டிற்கு சேவையாற்ற வரவேண்டும் எனவும் அறிவுரை
- தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்
- குடியுரிமை திருத்தச் சட்டம் என்.ஆர்.சி.யுடன் தொடர்புடையது; அதனால் அதை எதிர்க்கிறோம் - மம்தா பானர்ஜி
- ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகள் தெரிவித்த காங்கிரஸ்
உலகம்:
- உக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்
- பிரேசிலில் துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய நபர் - 17 பேர் பத்திரமாக மீட்பு, இருவர் படுகாயம்
- உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் - அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்
- எடிட் செய்யப்பட்ட குடும்ப புகைப்படத்தால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின்
விளையாட்டு
- டெல்லி குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்கள் முன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் - ரிஷப் பண்ட்
- ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
- ஷபாலி வர்மா அதிரடி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
செய்திகள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion