மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: தெரிய வேண்டிய பயனுள்ள தகவல்கள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு
- தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி - ஏப்ரல் 12ல் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்பு
- இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் இதுவரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்
- மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க 10 தனிப்படைகள், 3 ராட்சத கூண்டுகள் அமைப்பு
- அங்கீகாரம் பெறாத கட்சியாக இருப்பதால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து
- கோடை காலத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் 8,500 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தகவல்
- மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் பொருளாதாரம் உயரும் என பாஜக மாநில அண்ணாமலை பேச்சு
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை
- மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர் கட்டாயம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
- மக்களவை தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது
இந்தியா:
- பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க பாஜகவால் மட்டுமே முடியும் என பிரதமர் மோடி பேச்சு
- அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தியின் ராபர்ட் வதேரா விருப்பம்
- சிந்தித்து புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்
- தாக்குதல் திட்டங்களுடன் இந்தியாவுக்குள் நேபாள எல்லைக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
- மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது
- பாஜகவை விட விஷமுள்ள பாம்பை நம்பலாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடும் விமர்சனம்
- மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சோனியா காந்தி - அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- பிரதமர் அல்லது குடியரசுத்தலைவர் பதவி வர முன்வந்தாலும் ஒருபோதும் பாஜகவில் இணைய மாட்டேன் - சித்தராமையா விமர்சனம்
உலகம்:
- வெனிசுலா நாட்டின் உலகின் மிக வயதான ஜூவான் தனது 114 வயதில் காலமானார்
- இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்
- தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி
- இஸ்ரேலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் நடைபெறும் என எச்சரிக்கை
விளையாட்டு:
- ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
- ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
- உபர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய அணி வீராங்கனை பி.வி.சிந்து விலகல்
- ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 6வது இடத்துக்கு முன்னேறியது சென்னை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion