மேலும் அறிய

12 PM Headlines: நண்பகல் 12 மணிச் செய்திகள்..! இதுவரை நடந்தது இதுதான்..!

12 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் மறைக்க எதுவும் இல்லை என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.  
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  
  • புதிய வகை கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரிவித்துள்ளார். 
  • தூத்துக்குடி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல். 
  • நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 
  • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தரப்பில் காவல் துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
  • தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்துக்கு மேலாக நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியா:

  • மக்களவை குளிர்காலக் கூட்டத்தொடர் முன் கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

  • மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. 
  • புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
  • டெல்லியில் 24% பேரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர் என்றும் பிஎப்.7 வகை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  • தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்று கட்டாயம் என ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
  • கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

உலகம்:

  • சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ரஷ்யா-உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.
  • ரஷ்யாவிடம் ஒரு போதும் சரணடைய மாட்டோம் என உக்ரேன் அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். 
  • ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனித்து விடப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். 
  • தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • செவ்வாய் கோளில் முதன்முறையாக நிலநடுக்கம் பற்றிய ஆய்வு பணிக்காக சென்ற இன்சைட் விண்கலம், என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என செய்தி அனுப்பியுள்ளது.

விளையாட்டு:

  • ஃபிபா உலகக் கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸியை கௌரவப்படுத்தும் விதமாக அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி தங்கள் 1,000 ரூபாய் நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் படத்தை வைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
  • இந்தியாவிற்கு எதிரான டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
  • வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது  நாள் ஆட்டத்தில் இதுவரை 38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 
  • ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget