மேலும் அறிய

Youtuber TTF Vasan: உதகையில் அதிவேகமாக சென்ற டிடிஎப் வாசன் ; மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீசார்

பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் டிடிஎப் வாசனை நிறுத்த முற்பட்ட போது நிற்காமல் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த புதுமந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய பிரபல யூட்டியூபர் டிடிஎப் வாசனுக்கு காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு வாட்டர் போர்டு பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25).  Twin throttlers என்ற யூடியூப் சேனலை டிடிஎப் வாசன் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது பயணத்தை வீடியோ பதிவு செய்து, அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். லட்சக்கணக்கானவர்கள் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீப காலமாக பிரபல யூடியூபரான இந்த டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டுவது மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்த பிரபல யூட்டியூபர் டிடிஎப் வாசன் ஹில்பங்க் என்ற பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில்  இருந்த போக்குவரத்துக் காவலர்கள் அவரை நிறுத்த முற்பட்ட போது நிற்காமல் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த புதுமந்து காவல் துறையினருக்கு இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுமந்த காவல் நிலையத்தை சார்ந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஹெ.பி.என் என்னும் பகுதியில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த டிடிஎப் வாசனை மடக்கி பிடித்துள்ளார். பின்னர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதன் காரணமாக மோட்டார் வாகன சட்டத்தின்படி டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் டிடிஎப் வாசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்று வேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதன் காரணமாக தனக்கு அபராதம் விதிப்பதை  காவல்துறையினர் வீடியோ பதிவு செய்த போது அதனை வாசன் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். டிடிஎஃப் வாசனுக்கு அபராதம் விதித்த இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget