டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு.. டி.ஆர்.பி.ராஜா விளக்கம்
பரந்தூர் விமான நிலையம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெகு விரைவில் அமைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் பகுதிகளிலும் இதுவரை 6.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் அனைத்து சிப்காட் பகுதிகளிலும் ஒரு லட்சம் மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டு அதன் துவக்க விழாவை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மாம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட்டில் துவக்க விழாவிற்கு தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.
42 தொழிற்பூங்காக்கள்
மரக்கன்றுகள் நடும் விழாவினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்து, தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்று வருகின்றன. சிப்காட் நிறுவனம் 23 மாவட்டங்களில், 42,000 த்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 42 தொழில்பூங்காக்களை உருவாக்கி மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்படத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.
ஒரு லட்சம் பனை விதைகள்
சிப்காட் நிறுவனம் நீடித்து நிலைபெறத்தக்க வகையிலான வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பூங்காக்கள் விளங்கிட, ஏற்கனவே 650 இலட்சம் மரக்கன்றுகள் வனத்துறையினர் மூலம் சிப்காடின் திறந்த வெளிப்பகுதிகள் மற்றும் சாலையோரங்கள் நடவு செய்யபட்டுள்ளது. அத்தோடு 50,000 பனைமரக் கன்றுகள். ஓசூர், பர்கூர் மற்றும் குருபரப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழில் பூங்காக்களின் முன்னோடித் திட்டமாக நடவு செய்யபட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சிப்காட் நிறுவனம் எதிர் வரும் ஆண்டிற்குள் 10 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதை இலக்காக கொண்டுள்ளது.
7.50 இலட்சம் மரக்கன்றுகள்
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் ஒரே நாளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ள மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், 2000 மரக்கன்றுகளை நடும் விழாவினை மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போது நடப்படவுள்ள ஒரு இலட்சம் மரக்கன்றுகளை சேர்த்து மொத்தமாக 7.50 இலட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து சிப்காட் நிறுவனம் பராமரிப்பு செய்து வருகிறது.
டிரில்லியன் டாலர்
தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) அதன் தொழில் பூங்காக்களை மிகவும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் மற்றும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பாக செயல்படுவதின் வகையிலும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு முதலமைச்சரின் பெரும் இலக்கான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது என தெரிவித்தார்.
பின் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறுகையில், பரந்தூர் விமான நிலையம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெகு விரைவில் அமைய இருக்கிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு சார்பில் அனைத்து பணிகள் நிறைவடைந்தது. மத்திய அரசுக்காக காத்துக் கொண்டிருக்கிற விரைவில் துவங்கும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி அளித்தார்.மேலும் சிப்காட் பகுதியை பண விதைகள் நடும் பணியும் துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சிப்காட் மேலாளர் செந்தில் சிப்காட் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.