மேலும் அறிய

அரசுப்பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் செய்த பள்ளி மாணவர்கள்..! காவல்துறை விதித்த தண்டனை என்ன தெரியுமா..?

மாணவர்களை பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கண்டித்த காவல் துறையினர், அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நூதன முறையில் தண்டனை அளித்துள்ளனர்.

சென்னையில் அரசு பேருந்தை நிறுத்தி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கு போக்குவரைக் கட்டுப்படுத்துமாறு காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். சென்னை, எண்ணூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் - பூந்தமல்லி இடையே அரசுப் பேருந்து ஒன்றை பள்ளி மாணவர்கள் இருவர் மடக்கி ரீல்ஸ் செய்த வீடியோ இணையத்தில் பரவியது.

இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங் பாடலுக்கு ரீல்ஸ்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘மேரி மீ’ என்ற பாடலுக்கு இவர்கள் ரீல்ஸ் செய்த நிலையில், வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் இந்த மாணவர்களைக் கண்டறிந்து கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இருவரும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கண்டித்த காவல் துறையினர், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நூதன முறையில் தண்டனை அளித்துள்ளனர். அதன்படி பள்ளி நேரம் முடிந்த இரண்டு நாள்களுக்கு இருவரும் போக்குவரத்து காவலர்களுடன் போக்குவரத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய சம்பவங்கள்

முன்னதாக இதேபோன்று சதுரங்கப் பலகை போன்று வண்ணம் தீட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல், செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சுகுமார் என்பவருடைய மகன் அசோக் (24), குமார் என்பவருடைய மகன் மோகன் (17) ராமு என்பவருடைய மகன் பிரகாஷ் (17) இவர்கள் 3 மூன்று பேரும் ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து ரீல்ஸ் செய்தபோது அடிபட்டு உடல் சிதறி உயிரிழந்தனர்.

தொடரும் விபத்துகள்

சமீபத்தில் தெலங்கானாவில் இதேபோல் 17 வயது சிறுவன் ஒருவர், ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல் செய்ய முயன்று பலத்த காயமடைந்தார். தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள காசிபேட் ரயில் நிலையம் அருகே இந்தச் சம்பவம் நடந்ததது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த  வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்றைய தொழில்நுட்ப உலகில் இந்தியாவில் இதுபோன்ற விபத்துக்கள் அதிகரித்து வரும் போக்கு கவலை அடையச் செய்யும் வகையில் உள்ளது.

மேலும் படிக்க: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Embed widget