மேலும் அறிய

43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?

இந்த பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், 2021-ம் ஆண்டு ஜேப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

சுமார் 43 ஆண்டுகள் நீண்ட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 67 வயதான கணவர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு, நீண்டகால திருமண உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி ஒரு முக்கிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1982ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே கணவன் மனைவி இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், கணவர் தனது மனைவி மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார். தனது மனைவி தன் மீது தொடர்ச்சியாக சந்தேகப்படுவதாகவும், அவதூறாக பேசுவதாகவும், அது தனது மன அமைதியை வெகுவாக பாதித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், 2021-ம் ஆண்டு ஜேப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

குடும்ப நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, கணவர் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை சமர்ப்பித்தார். மனைவியின் சந்தேகப்படும் குணமும், அவதூறான பேச்சும் தனது வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதையும் விளக்கினார். இந்த ஆதாரங்களை பரிசீலித்த குடும்ப நீதிமன்றம், கணவருக்கு விவாகரத்து வழங்கியது.

மேல் முறையீடு

குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனைவி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், உயர் நீதிமன்றமும் குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. நீதிபதிகள் மகேந்திர குமார் கோயல் மற்றும் இந்திரேஷ் குமார் அடங்கிய அமர்வு கூறும்போது, "மனைவி தன் கணவனை சந்தேகப்படுவது, அவதூறாகப் பேசுவது போன்ற செயல்கள் கணவருக்கு மன ரீதியான கொடுமையாகும். இது போன்ற சூழலில், தொடர்ந்து திருமண உறவில் நீடிக்க கணவரை வற்புறுத்துவது நியாயமற்றது" என்று கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பணம் தராத ஆத்திரம்: இரும்புத் தடியால் தந்தையைத் தாக்கிய மகன் - விசாரணையில் திடுக்கிடும் உண்மை!
பணம் தராத ஆத்திரம்: இரும்புத் தடியால் தந்தையைத் தாக்கிய மகன் - விசாரணையில் திடுக்கிடும் உண்மை!
Abhinandan Varthaman: அபிநந்தனை நியாபகம் இருக்கா? .. விமானப்படையில் ஓய்வு.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
அபிநந்தனை நியாபகம் இருக்கா? .. விமானப்படையில் ஓய்வு.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Punch EV Real World Milage: பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Embed widget