இர்பான் விவகாரம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
இர்பான் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் , இர்பான் மீதும் சட்ட ரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய மின்மாற்றி:
புதிய 250 KVA மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை ஜாபர்கான் பேட்டை சுந்திரமூர்த்தி தெரு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மின்மாற்றியை மக்களை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
Over load இருக்கும் மின்மாற்றிகளை கண்டறிந்து கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் 7 இடங்களில் கூடுதல் மின்மாற்றிகள் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 139 வது வட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் 250 KVA மின்மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 தெருகளை சார்ந்த சுமார் 1500 வீடுகளுக்கு பயன்பெறும்.
இர்பான் விவகாரத்தில் புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படாதது தொடர்பான கேள்விக்கு,
சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்பான் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்த பிறகு அதற்கான பதில் பெறப்படும். சம்பந்தப்பட்ட youtuber மற்றும் மருத்துவமனையின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. DMS சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொள்வார்கள்.
இந்த விவகாரத்தில் காலதாமதம் ஆகவில்லை. துறையின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ எடுக்கப்பட்டுள்ளது. இர்பான் மீதும் சட்ட ரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரும்.
பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழப்பை தவிர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு,
ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி கொடுக்கப்பட்ட பிறகு மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள், தாய்மார்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான பிரசவங்கள் சுகப்பிரசவமாக இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு இல்லாத மாவட்டமாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் இந்த இலக்கை எட்ட மருத்துவர்களை அறிவுறுத்தி வருகிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் திட்டமிட்டே பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக புகார் வருவது தொடர்பான கேள்விக்கு,
அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்று நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அரசு மருத்துவ துறையோடு , தனியார் மருத்துவத்துறையும் இணைந்து கடமை செய்தால் தான் மக்களுக்கான சேவையை செய்ய முடியும். இது தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரின் தலைவருக்கும் பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். விஜயபாஸ்கர் அவரின் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்யலாம். அவரை யாரும் தடுக்கப் போவது இல்லை. மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து மருந்துகள் இல்லை என்பதை அவர் நிரூபிக்கலாம். ஆனால் பேட்டி மட்டும் கொடுப்பதில் அர்த்தமில்லை. 10 ஆண்டுகளில் அப்போதைய அமைச்சர் எத்தனை மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தார் ? இந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும். அவர்கள் 10 ஆண்டுகளில் செய்ததையும் ஒப்பீடு செய்து நாங்கள் செய்ததில் 10% ஆவது அவர்கள் செய்திருந்தது அவர்கள் பேசினால் நன்றாக இருக்கும்.
37வது எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது தொடர்பான கேள்விக்கு
அங்கு கலந்து கொள்ளவில்லை என்பதால், தான் இங்கு கலந்து கொண்டு உள்ளேன். நாங்கள் மக்களோடு இருக்கிறோம்