மேலும் அறிய

The Indrani Mukerjea Story: யார் சொல்வதை நம்புவது? சுத்தலில் விடும் எபிசோட்கள்: இந்திராணி முகர்ஜி ஸ்டோரி விமர்சனம்!

The Iஸ்டோரிndrani Mukerjea Story: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்திராணி முகர்ஜி ஸ்டோரி ஆவணத் தொடரின் விமர்சனம்.

நெட்ஃப்ளிக்ளில் வெளியாகியிருக்கும் இந்திராணி முகர்ஜி ஸ்டோரி விமர்சனத்தைப் பார்க்கலாம்.

இந்திராணி முகர்ஜீ ஸ்டோரி ( The Indrani Mukerjea Story: Buried Truth)

The Indrani Mukerjea Story: யார் சொல்வதை நம்புவது? சுத்தலில் விடும் எபிசோட்கள்:  இந்திராணி முகர்ஜி ஸ்டோரி விமர்சனம்!

பிரபல தொலைக்காட்சி நிறுவனரான பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜீ கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். தனது தங்கை ஷீனா போராவைக் கொலை செய்ததாக அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்திராணி முகர்ஜி கைது செய்யப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன், அதாவது 2012ஆம் ஆண்டு ஷீனா போரா திடீரென்று காணாமல் போகிறார். மூன்று ஆண்டுகள் ஆள் அரவம் தெரியாமல் காணாமல் போன ஷீனாவை, இந்திராணி முகர்ஜி உட்பட யாரும் தேடவில்லை.  ஷீனாவின் காதலர் ராகுல் ஒருவரைத் தவிர.  

தனது கணவர் பீட்டர் முகர்ஜியுடன் இணைந்து ஐ.என்.எக்ஸ் மீடியா என்கிற நிறுவனத்தைத் தொடங்கிய  இந்திராணி முகர்ஜி இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர். அவர் கைது செய்யப்பட்ட இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளில் முக்கிய செய்தியாக ஒளிபரப்பாகியது. இந்திராணி முகர்ஜி பிரபலமாக இருந்தது மட்டும் இந்த வழக்கை பரபரப்பானதாக மாற்றவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் நம்பமுடியாத அதிர்ச்சிகரமான பல உண்மைகள் இந்த வழக்கில் வெளிவந்தபடி இருந்தன. ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் படத்திற்கு நிகரான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த டாக்யு சீரிஸ்.

சுத்தலில் விடும் எபிசோட்கள்

The Indrani Mukerjea Story: யார் சொல்வதை நம்புவது? சுத்தலில் விடும் எபிசோட்கள்:  இந்திராணி முகர்ஜி ஸ்டோரி விமர்சனம்!

இந்தத் தொடரில் உடனடியாக இழுத்துச் செல்வதற்கு முதல் காரணம் ஒரே உண்மைதான். அதாவது கொலை செய்யப்பட்ட ஷீனா போரா இந்திராணி முகர்ஜியின் சகோதரி இல்லை, அது அவருடை சொந்த மகள் என்பதே. இந்திரானி முகர்ஜி யார் , அவருடைய கடந்த காலம் என்ன என்பதை பத்திரிகையாளர்கள் ஆராயத் தொடங்குகிறார்கள்.

ஏற்கெனவே இந்திராணி முகர்ஜி இரண்டு முறை திருமனமானவர் என்பதும், அவருக்கு மூன்று குழந்தைகள் (இரண்டு பெண் ஒரு ஆண்) இருப்பதும் தெரிய வருகிறது. தனது மகள் மற்றும் மகனை அவர் தனது சகோதர சகோதரி என்று வெளி உலகத்திடம் சொன்னதற்கு பின் இருக்கும் காரணம் என்ன? ஷீனாவின் கொலை வழக்கில் இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா , மற்றும் இந்திராணி முகர்ஜியின் கார் டிரைவரின் பங்கு என்ன, இந்திராணியின் அன்றைய கணவர் பீட்டர் முகர்ஜீக்கும் ஷீனாவின் கொலைக்கு என்ன தொடர்பு எனப் பல கோணங்களில் இந்த வழக்கு ஆராயப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படாத புதிர்

இந்த ஆவணத் தொடரில் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இந்த வழக்கு பற்றி இப்படி கூறுகிறார். "எட்டு வருடங்களாக நீடிக்கும் இந்த வழக்கில் பல்வேறு வதந்திகள் கலந்துவிட்டன. இந்த வழக்கில் உண்மையை கண்டுபிடிப்பதை சிரமமாக்கும் ஒரு விஷயம் என்றால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஏதோ ஒரு உண்மையை வெளியே சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பது"

ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்த இந்திராணி முகர்ஜி கடந்த 2022ஆம் ஆண்டு ஜாமினில் வெளிவந்தார். இந்திராணி, அவரது வழக்கறிஞர், அவரது மகள் விதி, மகன் மிகைல், இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் , பத்திரிகையாளர்களின் பேட்டிகள் ஆகியவற்றைத் தொகுத்து இந்த ஆவணத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் இருக்கும் வாதங்கள், நியாயங்கள், குற்றச்சாட்டுகள் என பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் பார்வையாளராளராக நாம் இதில் யார் சொல்வது உண்மை என்கிற குழப்பத்திற்கு உள்ளாகிறோம்.  

தனது மகள் ஷீனாவை தான் கொல்லவில்லை என்றும், ஷீனா உயிரோடு இருப்பதாக தான் நம்புவதாகவும், யார் என்ன நினைத்தாலும் தான் குற்றவாளி இல்லை என்றும் உறுதியாக கூறுகிறார் இந்திராணி முகர்ஜி. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு எதிராக பலவிதமான குற்றச்சாட்டுகளும் நீடித்து வருகின்றன. தனது மகள் ஷீனாவை இந்திராணி முகர்ஜி கொலை செய்தாரா இல்லையா என்பது இன்று வரை விடுவிக்கப்படாத புதிராக இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget