மேலும் அறிய

Nna Thaan Case Kodu Review: திருடனை தொட்டா என்ன ஆகும்...? ‛நா தான் கேசு கொடு’ விமர்சனம் இதோ!

Nna Thaan Case Kodu : எளிய மனிதனால் அரசு இயந்திரத்தை கேள்வி கேட்க முடியும் என்பது கேரளா மாதிரியான மாநிலங்களில் சர்வசாதாரணம் என நாம் நினைக்கிறோம். ஆனால்...

‛நா தான் கேசு கொடு’ இப்படி ஒரு தலைப்பை பார்க்கும் போது, கொஞ்சம் இல்லை ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். உண்மையில் படமும் அப்படி தான். சிறிய திருட்டுகளை அரங்கேற்றும் திருடன். போலீசுக்கு பயந்து தப்பி இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுகிறான். அங்கு பெண் மீது காதல், கல்யாணம் ஆகாமலேயே அந்த பெண் கர்ப்பிணியாகிறாள். 

இதற்கிடையில் அங்குள்ள திருவிழாவுக்கு செல்லும் அந்த ஆண், நிகழ்ச்சி முடிந்து வரும் போது, எம்.எல்.ஏ., வீட்டில் ஏறிக் குதிக்கிறார். அங்கிருந்த நாய்கள் அவனை கடித்து குதற, திருடன் என நினைத்துஅவனை பிடிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். பழைய வழக்குகளை வைத்து, இவன் திருடத்தான் வந்தான் என்று அவன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. தன்னை ஆட்டோ ஒன்று ஏற்ற வந்ததாகவும், அதற்கு பயந்து தாவி எம்.எல்.ஏ., வீட்டில் ஏறி குதித்ததாகவும் தானே வாதிடுகிறார் அந்த ஆண்.

View this post on Instagram
 
A post shared by Disney+ Hotstar Tamil (@disneyplushotstartamil)

ஆட்டோ ஏன் மோத வந்தது, அதற்கு ரோட்டில் இருந்த குழி தான் காரணம் என்றும், அதற்கு  பொதுப்பணித்துறை அமைச்சர் தான் காரணம் என்றும், அவர் மீது வழக்கு தொடர்கிறார் அந்த ஆண். அதை நிரூபிக்கவும், அதற்கான சாட்சியங்களை அழைத்து வரவும் சராசரி மனிதன் எடுக்கும் முயற்சிகளும், அவரே வழக்கறிஞராக மாறி வாதங்களை வைப்பதும் தான் கதை.

மலையாள சினிமாக்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன என்பதை ஒவ்வொரு படங்களும் தன் படைப்புகள் வழியாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அப்படி தான், இந்த படமும். ஒரு முன்னாள் திருடன், ஒரு சராசரி மனிதனாக காட்சிகளில் குஞ்சாகோ கோபன் தத்ரூபமாக நடித்திருக்கிறார். திருவிழாக்களில் இசைக்கு அவர் ஆடும் போதும், நாய் கடித்து ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் போதும், மனிதர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். 

காயத்ரியின் கதாபாத்திரம் இன்னும் இயல்பாக இருக்கிறது. தமிழில் அவரை வீணடிக்கிறார்கள் என்றே தெரிகிறது. மற்றபடி, படத்தில் கதையின் பாத்திரங்களாக வரும் ஒவ்வொருவரும் மிக மிக கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். நீதிபதியில் தொடங்கி, வழக்கறிஞர்கள், போலீஸ்காரர்கள், சாட்சிகள் என எல்லோருமே நல்ல நடிகர் தேர்வு. 

எளிய மனிதனால் அரசு இயந்திரத்தை கேள்வி கேட்க முடியும் என்பது கேரளா மாதிரியான மாநிலங்களில் சர்வசாதாரணம் என நாம் நினைக்கிறோம். ஆனால், அங்கும் அதற்கு சில தடைகள் உண்டு. அதை எப்படி உடைக்கலாம் என்பதை அருமையாக காட்டியிருக்கிறார்கள். டவுன் வின்சென்ட் இசை, படத்தோடு பயணிக்கிறது. ரதீஷ் பாலகிருஷ்ண படுவாலின் எழுத்தும் இயக்கமும் தத்ரூபம். 

மலையாளத்தில் தயாரான இத்திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. மலையாள பட விரும்பிகளுக்கு இந்த படம் நல்ல படையல். வழக்கமான கேரள படங்களுக்கான நீளம் இதிலும் இருந்தாலும், எதார்த்தத்திற்கு அது தேவைப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget