News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

நீரிழிவு நோயில் இருந்து கருவுறுதல் பிரச்சனை வரை… பூசணி விதையின் ஆச்சரியமளிக்கும் நன்மைகள்!

பூசணி விதைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளதோடு, பல்வேறு நன்மைகளை உள்ளடக்கி உள்ளன. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

FOLLOW US: 
Share:

ஊட்டச்சத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும், அதை சரியாகப் பெறுவதன் நன்மையை நாம் அனைவருமே அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு உதவும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து அவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அந்த பட்டியலில் முக்கியமான இடத்தை பெறுவது பூசணி விதை. பூசணி விதைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளதோடு, பல்வேறு நன்மைகளை உள்ளடக்கி உள்ளன. பூசணி விதைகளின் சில ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் மனதில் கொண்டு அவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீர் தொடர்பான பிரச்சனை

பூசணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. WebMD படி, அவற்றில் உள்ள சில இரசாயனங்கள் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தையும் குறைக்கின்றன.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது

கருவுறுதல் அளவு பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு, அவர்களின் உணவில் சிங்க் (zinc) குறைபாடு இருக்கலாம். பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு ஸ்பெர்ம் எண்ணிக்கை அதிகரித்து கருவுறும் தன்மை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்: Raasa kannu : வலி நிறைந்த வரிகளும் மனதை கனக்க செய்யும் குரலும்..வெளியானது மாமன்னனின் ராசா கண்ணு பாடல்

நல்ல உறக்கம்

படுக்கைக்குச் செல்வதற்கு முன் பூசணி விதைகளை சாப்பிடுவது நல்ல தூக்கத்தைப் பெற உதவும். அவற்றில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது நம்மை படுத்தவுடன் உடனேயே தூங்க செய்கிறது. பூசணி விதைகளில் துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் இருப்பதால், அவை உறங்கும் நேர அளவையும், ஆழத்தையும் அதிகரிக்கும் என்று WebMD கூறுகிறது.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

டாக்டர் அஷ்வினி சரோட் சந்திரசேகரா கூறுகையில், பூசணி விதைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைப்பு பண்புகள் உள்ளன. அவை உயர் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆபத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க வழிவகுக்கிறது. அவற்றில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போதுமான அளவில் உள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. பூசணி மற்றும் ஆளி விதைகளை ஒன்றாக சாப்பிடுவது நீரிழிவு சிக்கல்களைக் குறைக்கும் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். பூசணி விதைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

Published at : 21 May 2023 08:16 AM (IST) Tags: Immunity Diabetes Health benefits Pumpkin Pumpkin seeds Health benefits of Pumpkin seeds Pumpkin seeds benefits Pumpkin seeds health benefits

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!

Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!

Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!

Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!

"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை

செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு

செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு