TNCSC Notification:எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா?அரசு துறையில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?
TNCSC Notification 2023: இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை கீழே காணலாம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பருவகால பட்டியல் எழுத்தர் -80
பருவகால காவலர்-80
மொத்த பணியிடங்கள்- 160
பணியிடம்: இராணிப்பேட்டை
பணி குறித்த கூடுதல் விவரம்:
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் பணிக்காக இன சுழற்சி அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
- பருவகால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு இளங்க்லை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பருவகால காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஊதிய விவரம்:
Seasonal Bill Clerk - Rs.5285 + (DA) Rs.3499/- TA Rs.120/-
Seasonal Watchman - Rs.5218 + (DA) Rs.3499/- TA Rs.160/-
எப்படி விண்ணப்பிப்பது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுகொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நான்காவது ‘ஏ’பிளாக்,
இராணிப்பேட்டை
விண்ணப்பிக்க கடைசி நாள்- 03.05.2023
மேலும் வாசிக்க.