Family Planning: 2 குழந்தையோடு நிறுத்திக் கொள்வதே பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் சொத்து - சுகாதாரத்துறை அதிகாரிகள்
நமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சேர்த்து வைக்கப்படும் சொத்து எதுவென்றால் இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது தான்.
#madurai | உசிலம்பட்டியில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை வாரத்தை முன்னிட்டு குடும்ப நல அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
— arunchinna (@arunreporter92) November 22, 2023
Further reports to follow -@abpnadu
| @abplive | @abpmajhatv | @Ns7Senthil143 | @LPRABHAKARANPR3 | pic.twitter.com/mBSWq9eKHC
சுகாதரத்துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம்,”ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்வதற்கு தங்க தந்தை என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்க தந்தை திட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் கத்தியின்றி, இரத்தமின்றி அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் செய்து வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 5 ஆயிரம் ரூபாய் பரிசாகவும், அத்துடன் அரசு நலத்திட்ட உதவிகளாக தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன்கள், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. தங்க தந்தை திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பயன்பெற ஆண்கள் முன் வர வேண்டும். மனைவியின் மீது அதிக அன்பு கொண்ட கணவர்கள் தாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும். குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் பிரசவங்களை மருத்துவமனைகளில் மட்டும்தான் பார்க்க வேண்டும் அவ்வாறு பிரசவம் முடிந்தவுடன் அதே மருத்துவமனையில் கணவனோ அல்லது மனைவியோ குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு ஒரு முறையும் குடும்ப நல அறுவை சிகிச்சைக்காக ஒரு முறையும் மருத்துவமனைகளுக்கு சென்று கால விரையத்தை தடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சேர்த்து வைக்கப்படும் சொத்து எதுவென்றால் இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது தான்” என்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Leo OTT Release: “அண்ணன் வர்றார் வழிய விடு” .. ஓடிடிக்கு வரும் லியோ படம்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு..!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )