ஸ்ரீதேவியின் மகள் என்றால் எதையும் செய்யலாமா.. பரம் சுந்தரி டீசர் சர்ச்சை.. மலையாள நடிகை காட்டமான பதிவு!
பரம் சுந்தரி படத்தின் டீசர் வெளியான நிலையில், மலையாள நடிகை ஜான்வி கபூரை காட்டமாக விமர்சித்துள்ளார்.

வேட்டி சட்டை, இடது தோளில் வெள்ளை துண்டு, நெத்தியில் பட்டை அல்லது திருநீறு முரட்டுத்தனமான முகத்துடன் இருந்தால் அவர் தான் தமிழர். குறிப்பாக கொஞ்சம் முரடனாக காட்டை முறுக்கு மீசை, கயைலி வீச்சரிவாள் இருப்பது போன்று காலம் காலமாக பாலிவுட் சினிமாவில் தமிழர்களை காட்சிப்படுத்தி வருகிறது. இது சற்று கோபம் இருக்கத்தான் செய்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருப்பார். இப்படத்தில் தமிழ் பெண்ணாக தீபிகா படுகோனே இருந்தாலும், சத்யராஜின் கதாப்பாத்திரம் அப்படித்தான் இருக்கும். இதை பார்த்து பலரும் நாங்கள் இப்படியா இருக்கோம் என்று குமுறும் தமிழர்கள் ஏராளம்.
அதேபோன்று மலையாள சினிமாக்களில் தமிழர்களை திருடராகவும் அல்லது கிண்டல் அடிப்பது போன்ற காட்சியமைப்புகள் தான் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன. பாலிவுட் சினிமாவில் தென்னிந்தியர்களை கேலிக்குள்ளாக்கும் வகையில் வரும் படங்களை அதிகம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், மீண்டுமொரு ஒரு படத்தின் டீசர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கிற பரம் சுந்தரி படத்தின் டீசர் சர்ச்சையாக மாறியுள்ளது.
வட இந்தியாவை சேர்ந்த இளைஞர் சித்தார்த் மல்ஹோத்ரா, கேரளாவைச் சேர்ந்த ஜான்வி கபூரை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பெண்ணின் திருமண நாளன்று அவரை மணம் முடித்து, இருவரும் ஓட்டம் பிடிப்பது போல் பரம் சுந்தரி படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில் ஜான்வி கபூர் பேசும் மலையாள மொழி மலையாளமா என்று நடிகை பவித்ரா மேனன் கொந்தளிக்கிறார்.
நடிகை பவித்ரா மேனன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கேரளாவில் இருக்கும் பெண்கள் எப்போதும் மல்லிகைப்பூ, வைத்துக்கொண்டு மோகினி போன்று ஆடிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஜான்வி கபூர் பேசுவது போன்று கேரளாவில் யாரும் பேசமாட்டார்கள். இந்த பாத்திரத்திற்கு ஒரு மலையாளப் பெண்ணை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமானதா? உங்களுக்கு ஒரு மலையாள நடிகையை நடிக்க வைப்பதில் என்ன பிரச்னை? ஏன் இப்படித் தொடர்ந்து மலையாள கதாபாத்திரங்களைத் தவறாகத் திரையில் காட்டி வருகிறீர்கள்?. ஸ்ரீதேவி மகள் என்பதால் எதை வேண்டும் என்றாலும் செய்யலாமா என காட்டமாக பேசியுள்ளார். இதற்கு கேரள இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து கடுமையாக ஜான்வி கபூரை சாடி வருகிறார்கள்.





















