ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாரா?.. சுவாசிகா இல்லைனா லப்பர் பந்து கிடையாது.. தமிழரசன் பச்சைமுத்து ஓபன் டாக்
கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படத்தின் இயக்குநர் நடிகையை புகழ்ந்து பேசியுள்ளார்.

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து இயக்கியிருந்தார். கடந்தாண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. கெத்து கதாப்பாத்திரத்தை அனைவரும் கொண்டாட தொடங்கிவிட்டனர். அதேபான்று கெத்து மனைவியாக நடித்த சுவாசிகாவும் யசோதாவாக வாழ்ந்திருப்பார். இப்படத்தின் மூலம் தனது செகன்ட் இன்னிங்சை தொடங்கியிருக்கும் அவர் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழரசன், நடிகை சுவாசிகா இல்லை என்றால் லப்பர் பந்து படம் வந்திருக்காது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இப்படத்தின் கதையை பல நடிகைகளிடம் கூறினேன். யாரும் நடிக்க முன்வரவில்லை. ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாரா என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்கள். ஆனால், சுவாசிகாவிடம் கதையை கூறியபோது கதாப்பாத்திரத்தின் வலிமையை புரிந்துகொண்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இப்பொழுதே எனது அடுத்த படம் குறித்தும் யாரை நடிக்க வைக்க போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு கதை எழுதி உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. கதை எல்லோருக்கும் பிடிக்கும் விதமாகவும் அதை இயக்குவதற்கான நேரமும் அமைய வேண்டும். நாம் எழுதும் கதை தான் கதாநாயகனை உருவாக்கும். விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தமிழரசன் பச்சை முத்து தெரிவித்துள்ளார்.





















