மீனாவிடம் மாட்டிக்கொண்ட ரோகினி அம்மா.. கண்ணீர் விட்டு கதறும் க்ரிஷ்.. பரபரப்பை கிளப்பும் புதிய புரோமோ
Siragadikka Aasai: ரோஹினி அம்மாவை சந்தித்ததும் மீனா கொடுத்த ரியாக்சன் பரபரப்பின் உச்சம் தான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பின் உச்சமாக கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. எபிசோடுக்கு எபிசோடு பரபரப்பும் விறுவிறுப்பும் இருப்பதால் மக்கள் ரசித்து பார்க்க தொடங்கிவிட்டார்கள். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
சமீபத்தில் இந்த சீரியலின் வசனகர்த்தா வசனகர்த்தா குரு சம்பத்குமார் அளித்த பேட்டியில் சிறகடிக்க ஆசை 1800 எபிசோடு வரை செல்லும் என தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது போலவே சிறகடிக்க ஆசை சீரியல் முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது. முந்தைய எபிசோடுகளில் க்ரிஷ் பாட்டி உடல்நிலை சரியில்லாததால் அவனை முத்து-மீனா வீட்டிற்கு அழைத்து வர அதில் இருந்து பிரச்னை சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிஷ் பாட்டி திடீரென காணாமல் போய் விடுகிறார். ரோகினி அடுத்தடுத்து சதி திட்டம் தீட்டினாலும் இயற்கையாக என்ன நிகழுமோ அதுதான கதையில் நடக்கும் என்பது போல முத்துவும் மீனாவும் கிரிஷ் மீது அதீத அன்பை பாெழிகின்றனர். எப்படியாவது கிரிஷை வீட்டில் இருந்து வெளியேற்ற போராடி வருகிறார்.
விஜயா ஒரு பக்கம் வார்த்தையால் க்ரிஷை காயப்படுத்தி பேசுவது ரோஹினிக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. மகனை மறைத்து வைத்து திருமணம் செய்திருக்கும் ரோஹினிக்கு நாளுக்கு நாள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்திலேயே அதிக தவறுகளை செய்கிறார். கிரிஷ் படித்த பள்ளியில் இருந்து இழுத்து வந்து வேறு பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் ரோஹினியின் அம்மாவும் காணாமல் போக சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், கிரிஷை வித்யா வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார் ரோகினி. ஒரு பக்கம் கடையில் இருந்து பணத்தை திருடியுள்ளார். அந்த பிரச்னையும் மனோவிற்கு தெரிந்தால் என்ன செய்வார் என்பது பதைபதைக்க வைக்கிறது. இந்த வாரத்திற்கான சிறகடிக்க ஆசை புதிய புரோமோ வீடியோவில் ரோகினி தனது மகனை புதுப் பள்ளியில் சேர்த்துவிடுவதோடு ஹாஸ்டலில் சேர்க்க திட்டம் போட்டுள்ளார். ஆனால், க்ரிஷ் அந்த பள்ளியில் படிக்க மாட்டேன் என அம்மாவிடம் கதறி அழுகிறார். மற்றொரு பக்கம் மீனா ரோகினியின் அம்மாவை மீனா பார்த்துவிட, அவரிடம் என்ன நடந்தது உங்களது மகள் எங்கே என கேட்டதும் கண்ணீர் விட்டு அழுகிறார். ஒரு வேளை ரோஹினி தான் க்ரிஷின் அம்மா என்று சொல்லி விடுவாரோ என்ற ஆவலும் அதிகரித்துள்ளது.





















