மேலும் அறிய

63 வயதை எட்டும் இயக்குநர் ஷங்கர் பற்றி பலர் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர் ஷங்கர் இன்று தனது 63 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரைப் பற்றி பலர் அறியாத தகவலைப் பார்க்கலாம்

இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள்

வெள்ளித்திரையில்  ஒவ்வொரு காலகட்டத்திலும் வெகுஜன சினிமா ரசிகர்களை தன்வசம் கட்டிப் போட ஒரு  இயக்குநர்  வருவார். அந்தவகையில் 90-களில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் பல்வேறு பிரம்மாண்டங்களை  ஏற்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் இயக்குநர் ஷங்கர், இன்று (ஆகஸ்ட் 17) தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஷங்கர் இயக்கிய படங்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் ஷங்கரைப் பற்றி ரசிகர்கள் அறியாத பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவற்றில் சிலதை இங்கே பார்க்கலாம் 

சங்கரைப் பற்றி பலர் அறியாத தகவல்

முன்னொரு காலம் வந்த 'குங்குமம்' படத்தில் நடிகர் திலகம்  சிவாஜியின் பெயர் சங்கர். தனக்கு ஒரு மகன் பிறந்தால் 'ஷங்கர்' எனப் பெயர் வைப்பேன் எனச் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கரின் தாயார். ஆண் குழந்தையே அவருக்குப் பிறக்க அவரே 'ஷங்கர்' ஆகிவிட்டார்.

உண்மையில் நடிக்க ஆசைப்பட்டு  கோலிவுட் வந்தவர்தான் ஷங்கர். பாதை திசை மாற்ற சின்ன சின்ன வேடங்களில் படத்தில் நடித்தார். அது அத்தனையும்யும் காமெடிதான். 

 எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோரிடம்  உதவி இயக்குநராக சேர்ந்து சினிமா கற்றுக் கொண்டார். 1993ல் ‘ஜென்டில்மேன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கரின் முதல் படமே அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. இப்படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலில் 2டி அனிமேஷனை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருப்பார் ஷங்கர். மட்டுமின்றி மிகுந்த பொருட்செலவில் பிரமாண்ட திரைப்படங்களை உருவாக்குவதில்  முன்னோடி என்று கூடச் சொல்லலாம். அந்தக் காலத்திலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மெகா பட்ஜெட் திரைப்படம் ‘சந்திரலேகா’. என்றாலும் பிரமாண்டம் என்றாலே ஷங்கர் என்னும் பிராண்ட் விழுந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது அத்தனையும் திரைப்படங்களிலும் உள்ள காட்சிகள் நமக்கு ஏற்படுத்தும் பிரமிப்பு. 

இத்தனைக்கும் ஷங்கர் முதன் முதலில் இயக்க விரும்பிய படம், ‘அழகிய குயில்’ என்கிற எளிமையான காதல் கதை. ஒருவேளை இது வெளியாகி வெற்றி பெற்று விருதுகள் வாங்கியிருந்தால் அவரின் பாதை வேறு வகையாக மாறியிருக்குமோ, என்னமோ!

ஷூட்டிங் வருவதற்கு முன்பு என்ன ஷாட், எவ்வளவு நேரம் போகும், அதன் அளவு எவ்வளவு என்பது வரை அவ்வளவு கச்சிதமாகத் தயாராக வருவார். அதில் பிசகியதே கிடையாது. அவரது வெற்றிக்குத் திட்டமிடலே முதல் காரணம் என்று பலரும் சொல்வதுண்டு.

தினமும் காலை 5 மணிக்கு எழுந்துடுவார். சின்னதாக உடற்பயிற்சி, தினசரி பத்திரிகைகள், வார இதழ்களை ஒன்றுவிடாமல் வாசிச்சுடுவார். அரசியலின் மீது கூர்ந்த கவனிப்பு உண்டு. துல்லியமான ஞாபக சக்தி. ரொம்ப நாளைக்குப் பிறகு சந்தித்தால் கூட ஒருவரின் பெயரைச் சொல்லி நலம் விசாரிசிக்கக் கூடியவர். ஷங்கரிடம் உதவி இயக்குநராக குறைந்தது  100 பேர்களாவது வந்து போயிருப்பார்கள். 

குறிப்பிட்டு சொல்வதனால  ஏ.வெங்கடேஷ், பாலாஜி சக்திவேல், காந்தி கிருஷ்ணா, மாதேஷ், இளங்கண்ணன், கார்த்தி, ஹோசிமின், வசந்தபாலன், அட்லி என இன்னமும் தொடர்ந்து சினிமாவில் மிளிர்வோர் எண்ணிக்கையும் ஜாஸ்தி


இப்படி திரையுலகில் மூன்று தசாப்தங்களாக ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்ப இன்னிக்கும் புது   திரைப்படங்களை வழங்க முயலும் இந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Embed widget