மேலும் அறிய
Advertisement
'Toxic' shoot begins : நியூ லுக்கில் ராக்கி பாய் அடுத்த வேட்டை ஆரம்பம்! பூஜையுடன் 'டாக்சிக்' ஷூட்டிங் இன்று ஆரம்பமானது...
'Toxic' shoot begins : கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
கன்னட திரையுலகில் பிரபலமாக ராக்கி பாய் என அழைக்கப்படும் நடிகர் யாஷ், 'கேஜிஎஃப்' படத்தின் வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்து விட்டார். 'கேஜிஎஃப் 2 ' படத்திற்கு பிறகு "டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்" என படத்தில் நடிக்க உள்ளார். போதைப்பொருளுக்கு எதிரான கதைக்களத்தை மையமாக கொண்ட இப்படத்தை மலையாள சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக நடித்த கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் தமிழில் வெளியான 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் யாஷ் புதிய படத்தின் படப்பிடிப்பில் இணைவதற்கு முன்னர் கோயிலுக்கு சென்று சாமி வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பல பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்கள் நேற்றைய தினம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
"டாக்சிக்" படத்தின் நடிகர் யாஷ் ஜோடியாக பாலிவுட் பிரபலமான நடிகை கியாரா அத்வானி நடிக்க, நடிகர் யாஷ் தங்கையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் வில்லியாக ஜூமா குரேஷி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதியின் கூட்டு தொகை 8-8-8 ஆகும். அது யாஷ் லக்கி நம்பர் மற்றும் பிறந்த தேதியுடன் பொருந்துவதால் அன்றைக்கே படப்பிடிப்பை துவங்கலாம் என திட்டமிடப்பட்டது. இது யாஷ் நடிக்கும் 19வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Yash’s #Toxic Shoot Begins! pic.twitter.com/XiKeJrcamB
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 8, 2024
அந்த வகையில் "டாக்சிக்" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று முதல் துவங்கியது. வித்தியாசமான லுக்கில் யாஷ் முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பாண் இந்திய படமாக ஏப்ரல் 2025ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion