கறுப்பு இட்லி சாப்பிடும் கில்லி பட வில்லன்… இன்ஸ்டாகிராம் வீடியோ வைரல்! இதுலதான் செய்கிறார்களாம்…
ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் கறுப்பு இட்லி சாப்பிட்டு காண்பித்து வீடியோ வெளியிட்டுள்ளார். யாருமே அதிகம் கேள்விப்பட்டிடாத, பார்த்திடாத இந்த கறுப்பு இட்லி வீடியோ வைரலாகி வருகிறது.
தென்னிந்திய உணவுகளில் இட்லி என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவுதான். ஆனால் நாம் வெள்ளை நிறத்தில் இட்லி சாப்பிட்டிருப்போம், கறுப்பு நிறத்தில் என்றாவது இட்லி சாப்பிட்டிருக்கிறோமா? பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் கறுப்பு இட்லி சாப்பிட்டு காண்பிக்கிறார்.
ஆஷிஷ் வித்யார்த்தி
தொடர்ந்து சிறு சிறு கிராமங்கள், சாலை ஓரக்க்கடைகள், சிறிய கடைகளில் கிடைக்கும் வித்யாசமான, சுவையான உணவுகளை தேடி தேடி சென்று அதனை ருசித்து தனது ரசிகர்களுக்கு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியோடுவதை வழக்கமாக வைத்துள்ளார் வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. கந்தசாமி உள்ளிட்ட எண்ணற்றத் திரைப்படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி அதிகமான இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கறுப்பு இட்லி
அவர் படங்களில் நடித்து பிரபலமடைந்ததை விட உணவு விளாகிங் செய்து பிரபலமடைந்தது அதிகம் என்ற அளவுக்கு அவரது வீடியோக்கள் வைரலாகின்றன. சிறிய கடையில் தோசை, வடை, சூப், சிக்கன் போன்றவற்றை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டவர் சமீபத்தில் கறுப்பு இட்லி சாப்பிட்டு காண்பித்து வீடியோ வெளியிட்டுள்ளார். யாருமே அதிகம் கேள்விப்பட்டிடாத, பார்த்திடாத இந்த கறுப்பு இட்லி வீடியோ வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
மூன்று நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஐந்து லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். 60 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளது. பலர் இந்த இட்லி மீதான ஆர்வத்தை கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவின் கீழ் அந்த கடையின் முகவரியையும் ஆஷிஷ் வித்யார்த்தி இணைந்துள்ளார்.
View this post on Instagram
எப்படி கறுப்பாக இட்லி வருகிறது?
இந்த இட்லி எப்படி கறுப்பு நிறத்தில் வருகிறது என்பது எல்லோருக்குமே ஆச்சர்யம்தான். அதில் கரி சேர்க்கப்படுமா, கருக விடுவார்களா என்பதுதான் பார்க்கும் அனைவருக்கும் தோன்றும் முதல் எண்ணம். ஆனால் இந்த இட்லி தேங்காய் ஓடு, ஆரஞ்சு தோல், பீட்ரூட் சாறு மற்றும் பீட்ரூட் கூழ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்று இட்லி விற்பனையாளர் வீடியோவிலேயே சொன்னது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது. இது நெய் மற்றும் இட்லி பொடியுடன் பரிமாறப்படுகிறது. வித்யார்த்தி மேலும் இட்லிப் பொடிகளை கேட்டு வாங்கி சாப்பிடுவதை வீடியோவில் காணமுடிகிறது. அதோடு சேர்த்து சாப்பிடும்போது, இட்லி மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருப்பதாகக் கூறினார்.