Vijay Fan Boy Moment: தலைவா...! தளபதியையே தியேட்டரில் ஃபேனாக மாற்றிய மிரட்டல் ஹீரோ... - அமெரிக்காவில் நடந்தது என்ன தெரியுமா?
இதுவரை எந்த ரசிகரும் பார்த்திராத நடிகர் விஜய்யின் ஃபேன் பாய் மொமண்டை இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஃபேன் பாய் மொமண்டுகளை வாரி வழங்கும் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்யின் ஃபேன் பாய் தருணத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
விஜய்க்குள் இருக்கும் ரசிகர்
தமிழ் சினிமாவில் தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 90களில் அறிமுகமாகி, தத்தி தத்தி அடியெடுத்து வைத்து, தொடர்ந்து குடும்ப ஆடியன்ஸ்களை தன்வசப்படுத்தி, பின் ஆக்ஷன் ரூட் பிடித்து மாஸ் ஹீரோவாக உயர்ந்து இன்று கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாஸ் நாயகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு படத்துக்கு படம் எண்ணற்ற ஃபேன் பாய் மொமண்டுகளை வழங்கி வசூல் வேட்டையுடன் விசில் மழையையும் அப்ளாசையும் அள்ளி வருகிறார்.
வெங்கட் பிரபு தந்த சர்ப்ரைஸ்
இந்நிலையில், தன் கோடிக்கணக்கான ரசிகர்களைப் போல் தானும் ஒரு நடிகருக்கு ஃபேன் பாயாக இருந்து திரையரங்கில் ஆர்ப்பாட்டமாக விஜய் படம் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் இதுவரை எவரும் கற்பனை செய்து பார்த்திராத ஒரு மொமண்டை படம் பிடித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
தளபதி 68 படத்துக்காக நடிகர் விஜய் - வெங்கட் பிரபு இருவரும் முதன்முறையாக இணைந்துள்ள நிலையில், இப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர்.
வைரல் ஃபோட்டோ
இந்நிலையில் இதுவரை எந்த ரசிகரும் பார்த்திராத நடிகர் விஜய்யின் ஃபேன் பாய் மொமண்டை இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
A fan capturing a fan moment 🤩🙌🏼 #ThalapathyFanMoment pc: @vp_offl #Equalizer3 pic.twitter.com/iCM554stL9
— Archana Kalpathi (@archanakalpathi) September 2, 2023
ஹாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் ஹீரோவான டென்சல் வாஷிங்டனின் Equalizer 3 படம் பார்த்து விஜய் திரையரங்கில் ஆரவாரமாக எழுந்து நின்று கை நீட்டி என்ஜாய் செய்யும் இந்தப் புகைப்படம் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.