Varisu Movie: படம் வெளியாவதற்கு முன்பே பாதி லாபத்தை பார்த்துவிட்ட ‘வாரிசு’..!
Vairisu Movie: விஜய் நடித்துள்ளவாரிசு திரைப்படம் ரிலீஸிற்கு முன்பாகவே, போட்ட பணத்தில் பாதி லாபத்தை பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்து வரும் வாரிசு திரைப்படம் போட்ட பணத்தில் இருந்து பாதி லாபத்தை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு திரைப்படம்:
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் "வாரிசு" திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஃபேமிலி என்டர்டெயின்மெனராக உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக “ஆல் இந்தியா க்ரஷ்” ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.
View this post on Instagram
பொங்கலுக்கு ரெடியாக வாரிசு!
ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு படம், வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. வாரிசு திரைப்படத்துடன் சேர்ந்து, அஜித்தின் துணிவு படமும் வெளியிடப்படுவதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வாரிசு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
ரிலீஸிற்கு முன்பே பாதி லாபம்:
வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே, பாதிக்கும் மேற்பட்ட லாபத்தை பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், பிற மொழிகளின் திரையரங்கு உரிமைகள் இல்லாமலேயே, வாரிசு திரைப்படம் 280 கோடி லாபம் பார்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், படத்தின் 55 சதவீத லாபத்தினை, பட ரிலீஸிற்கு முன்னதாகவே வாரிசு உரிமையாளர்கள் சம்பாத்தித்து விட்டதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. வாரிசு திரைப்படம், விஜய் படம் என்பதாலும், வம்சி பைடப்பள்ளி இதற்கு முன்னர் எடுத்த படங்களில் ரசிகர்களை ஏமாற்றியதில்லை என்பதாலும் இந்த அளவிற்கு லாபம் பார்த்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Nearly 55% of this pre-release biz comes from non-theatrical revenue! #Varisu
— Rajasekar (@sekartweets) November 1, 2022
Even without Telugu rights, #ThalapathyVijay's #Vairsu producer Dil Raju is in the profit zone already! More than 280 crores of pre-release biz without Telugu theatrical rights! Sheer domination by @actorvijay
— Rajasekar (@sekartweets) November 1, 2022
வைரலான வாரிசு புகைப்படங்கள்!
வாரிசு படத்தின் படப்பிடிப்பு பணிகளின் போதே, சில காட்சிகள் லீக் ஆகின. அதில், சில சண்டை காட்சிகளும், ராஷ்மிகாவுடனான பாடல் காட்சியும் இடம் பெற்றிருந்தன. மர்ம நபர்களால் வெளியிடப்பட்ட இந்த வீடியோக்கள், வலைதளம் முழுவதும் வைரலாகின. இதனால், விஜய் ரசிகர்கள் பலர் கடுப்பாகினர். சில நாட்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் ஆகியோர் செல்ஃபி எடுப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகின. இந்த போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டது.