”செந்தமிழ் நாட்டு தமிழச்சியே “ - ரஷ்ய சாலையில் சேலையில் வலம் வரும் டாப்ஸி!
#TapcTravels என்ற பெயரில் தான் சுற்றிவரும் நாடுகள் குறித்த புகைப்படங்களை டாப்ஸி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. கோலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் டாப்ஸி தற்பொழுது பாலிவுட் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.டாப்ஸி நடிப்பை தவிற “கிரிக்கெட்” போன்ற விளையாட்டிலும் ஆர்வம் உடையவர். இவை எல்லாவற்றையும் தாண்டி டாப்ஸிக்கு ஊர் சுற்றுவதுதான் பிடித்தமான ஒன்று என தெரிவிக்கின்றனர் டாப்ஸிக்கு நெருக்கமானவர்கள் . #TapcTravels என்ற பெயரில் தான் சுற்றிவரும் நாடுகள் குறித்த புகைப்படங்களை டாப்ஸி பகிர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் தனது தங்கையுடன் ரஷ்யா சென்றிருந்த டாப்ஸி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் டாப்ஸி. புகைப்படத்தில் சேலை அணிந்து ரஷ்ய சாலை ஒன்றை அவசரகதியில் கடப்பது போல எதார்த்தமாக உள்ளது. ரஷ்யாவின் பிரபல செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரவு உணவு சாப்பிடுவதற்காக செல்லும் வழியில் , சாலையில் அழகை பார்த்த டாப்ஸிக்கு தான் அணிந்து வந்த சேலையுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என தோன்றியிருக்கும் போலும். உடனே கிளிக் செய்துவிட்டார்கள் சக நண்பர்கள். கூலர் ஒன்றை அணிந்து , ஊதா நிற பிளவுஸ் மற்றும் வெள்ளை நிற சேலை அணிந்து சிம்பிள் லுக்குடன் இருக்கும் டாப்ஸியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும் நடிகைகள் அங்குள்ள கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரியான உடைகளை அணிவது வழக்கம். ஆனால் தென்னிந்திய பாரம்பரிய உடையான புடவையை அணிந்து ரஷ்யாவில் உலா வருவதை கண்ட ரசிகர்கள் மெய்சிலிர்த்துள்ளனர். மேலும் ரஷ்யாவில் நடிகை ஷ்ரேயாவுடனான சந்திப்பு, பாரம்பரிய இடங்களை பார்த்த அனுபவங்கள் குறித்தும் தனது வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அவரது நடிப்பில் ”ஹசீன் தில்ரூபா” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தி மொழியில் உருவக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால், படமானது ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 2 ஆம் தேதி தில்ரூபா டாப்ஸி “நெட்ஃபிளிக்ஸ்” இணையதளம் மூலமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இந்த படம் குறித்த ட்ரைலர் மற்றும் அறிவிப்பை டாப்ஸி தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.அவ்வபோது துணிச்சலான கருத்துகளை பகிர்ந்து வரும் டாப்ஸி தனது சம்பளத்தை உயர்த்தி இயக்குநர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளாராம். இதுவரையில் 5 கோடி சம்பளம் வாங்கிய டாப்ஸி தற்பொழுது 8 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.டாப்ஸி தற்பொழுது நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ஜனகனமன என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.