"என்னை கல்யாணம் பண்ணிட்டு... அவளோட ஹனிமூன் போயிட்டு வரியா?" - பப்ளிக்கில் ருத்ரதாண்டவம் மனைவி
தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் ஹனிமூன் சென்று வருவதை கண்ட இளம்பெண் கோவை விமான நிலையத்தில் ரகலையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டுக்கு 30 விமானங்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று வெளிநாட்டுக்கு மூன்று விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அவர்களது உறவினர்கள் வரவேற்கவும், வழி அனுப்பவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7.20 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணிகள் வந்து வெளியே சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அனைவரது முன்னிலையிலும் "என்னை கல்யாணம் பண்ணிட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரையாடா".... "பொம்பள பொறுக்கி" என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டி தாறுமாறாக வசைபாடினார்.
இதைத்தொடர்ந்து அங்கு இருந்த அந்த நபரின் உறவினர் ஒருவர் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்றார். அப்பொழுது அவரது கன்னத்தில் அறைந்த அந்த பெண். அவரது சட்டையைப் பிடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தடுக்கச் சென்றபோது பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறீர்கள்... காசு இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வீர்களா என கேட்டு வாக்குவாதம் செய்தார்.
மேலும் அங்கு இருந்தவர்களை பார்த்து அந்தப் பெண் இத்தனை பேர் நிற்கிறீர்கள் காரில் அவன் தப்பித்து செல்கிறார் யாரும் அவனை பிடிக்க முடியவில்லை? என கேள்வி கேட்டு அங்கு இருந்தவர்களை திட்டினார். இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், விமான நிலையத்தில் ரகலையில் ஈடுபட்ட பெண் யார்? அந்த வாலிபருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது? என்பது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

