Nayanthara Luxury Home: லேடி சூப்பர் ஸ்டாரின் போயஸ் வீடு.. தியேட்டர் முதல் ஜிம் வரை.. நயன் வீட்டு இண்டீரியர் இத்தனை கோடியில்..
Nayanthara Luxury Home: லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் போய்ஸ் வீட்டின் இண்டீரியருக்கு மட்டும் பல கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara Luxury Home: லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் போய்ஸ் வீட்டின் இண்டீரியருக்கு மட்டும் பல கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவின் தன்மைக்கு தன்னை கரைத்துக்கொள்ளும் பலருக்கு மத்தியில் சினிமாவை தனக்கானதாக மாற்றியவர் என்றால் நயன்தாராதான். தென்னிந்திய சினிமாவின் குறிப்பாக தமிழ் சினிமாவின் கலக்கலான கதாநாயகி நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்கான ரசிகர் பட்டாளமும் மார்கெட்டும் உச்சத்தினை தொடும் அளவிற்கானது எனலாம். தன் திரையுலக வாழ்க்கையில் பல்வேறு ஏற்றம் மற்றும் சறுக்கல்களைக் கண்ட நயன் தற்போது இருக்கும் இடம் லேடி சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமாவின் முதல் முறையாக ஒரு நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் எனும் அடைமொழி கொடுக்கப்பட்டிருப்பது இவருக்கு மட்டும்தான்.
தனது சினிமா வாழ்க்கையினைவிடவும், சொந்த வாழ்க்கையில் பெரும் பின்னடைவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானவர். அதிலிருந்து மீண்டு வருவாரா? இனி நயன் அவ்வளவு தான் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டு இருக்கையில், அதிரடியான கம்பேக் கொடுத்து அனைவரின் வாயையும் அடைத்தவர்.
சமீபத்தில் தனது காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவனை மாமல்லபுரத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருகான் உட்பட தமிழ் திரையுலகமே கலந்து கொண்டது. வி.ஐ.பிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட இந்த திருமணத்திற்கு, கேரளாவில் இருந்து பைக்கில் வந்த ஒரு காதல் ஜோடி நயனைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றது. திருமணம் முடிந்தவுடன் ஹனிமூன் சென்ற நயன் விக்னேஷ் தம்பதியரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலானது.
இண்டீரியருக்கு மட்டும் 25 கோடி
ஹனிமூனை முடித்துவிட்டு திரும்பியுள்ள நயன் விக்னேஷ் சிவன் தம்பதியர் அடுத்து தங்களது சினிமா வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளனர். இதற்கு மத்தியில் நயன்தாராவின் கனவு வீடான, போயஸ் கார்டனில் வாங்கப்பட்ட வீட்டிற்கு இண்டீரியர் வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்காக மும்பையில் உள்ள ஒரு சிறப்பு குழுவினை வரவழைத்துள்ளனர் நயன் விக்னேஷ் தம்பதி என தகவல் வெளியாகியுள்ளது. நயனின் கனவு வீட்டிற்குள் அதிநவீன ஜிம், உலகத் தரம் வாய்ந்த தியேட்டர், கண்ணைக் கவரும் நீச்சல் குளம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாத்ரூமின் அளவு மட்டும் 1500 சதுர அடி. மொத்தம் 16 ஆயிரத்து 500 சதுர அடியில் தயாராகும் கனவு வீட்டில் 1500 சதுர அடி மட்டும் பாத்ரூமுக்கு என்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த இண்டீரியர் வேலைகளுக்காக மட்டும் செய்யப்படும் செலவு மட்டுமே 25 கோடியாம். சந்தோஷத்தில் தொடர்ந்து மிதந்துவரும் நயன் விக்னேஷ் தம்பதியினை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

