மேலும் அறிய

விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?

எண்ணெய் சத்து நீக்கப்பட்ட சோயாவில் 50 வீதம் தரம் மிகுந்த புரதமும் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, ஊட்டச்சத்து 'பி' போன்றவையும் நிறைந்துள்ளது.

தஞ்சாவூர்: இத்தனை சத்துக்களாக அதுவும் ஆரோக்கியத்தை உயர்த்துகிறதா என்று கேள்வி சோயாவை கண்டு எழும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ள சோயாவை மாசிபட்டத்தில் விதைத்து மகத்தான மகசூல் பெறலாம் என்று என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

சோயாவில் அதிகமான புரதமும், குறைவான கொழுப்புச்சத்தும் காணப்படுகிறது. பால், முட்டை மற்றும் இறைச்சிக்கு இணையான புரதச்சத்து சோயாவில் இருந்து கிடைக்கிறது. சோயா பயறுவகை பயிராகவும், எண்ணெய் வித்து பயிராகவும் பயரிடப்படுகிறது. பொதுவாக பயறுவகைகள் புரதச்சத்து நிறைந்தவை. இதில் மற்ற பயறுகளில் 25 சதம் புரதமும், சோயாவில் 40 சத புரதமும் காணப்படுகிறது. எனவே மாசிபட்டத்தில் மகத்தான மகசூல் பெறலாம்.

மாசி பட்டத்தில் டி.எஸ்.பி.21, பஞ்சாப்- 1 விதைக்கலாம். இதன்படி ஒரு கிலோ விதைக்க 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலக்க வேண்டும். மேலும் ஒரு பாக்கெட் 200 கிராம் ரைசோபியம், ஒரு பாக்கெட் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய அரிசி கஞ்சியுடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கலந்து விதைக்க வேண்டும்

ஏக்கருக்கு 17 கிலோ யூரியா, 20 கிலோ சூப்பர் பாஸ்பேட், 27 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும். ஜிப்சம் 80 கிலோ, சிங்சல்பேட் 10 கிலோ இடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.

பூப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக என்.ஏ.ஏ. என்கிற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 40 மில்லிகிராம் வீதமும், சாலிசிலிக் ஆசிட் ஒரு விட்டருக்கு 100 மில்லி கிராம் வீதமும் கலந்து தெளிக்கலாம். பின்னர் 15 நாள் கழித்து ஒரு முறை தெளிக்க வேண்டும். பூக்கும் சமயத்தில் ஒருலிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி. அல்லது 20 கிராம் யூரியா வீதம் கலந்து தெளிக்க வேண்டும். விதைகளை 2-3 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 30 செமீக்கு 5 செமீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.

விதைத்த மூன்றாவது நாளும், மண் வாகு, பருவத்திற்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். அதிகமான தண்ணீரும், அதிகமான வறட்சியும் மகசூலை பாதிக்கும். விதை விதைத்தவுடன் மண்ணில் ஈரம் இருக்கும்போது ஏக்கருக்கு 400 மில்லிலிட்டர் தெளிக்க வேண்டும். களை முளைத்த பின்பு தெளிப்பதாக இருந்தால் விதைத்த 20ம் நாள் 20 கிராம் இமஸித்தாபயிர் தெளிக்க வேண்டும்.

செடியில் உள்ள இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதும் இலைகள் உதிர்வதும் அறுவடை செய்ய வேண்டிய அறிகுறிகள் ஆகும். எண்ணெய் சத்து நீக்கப்பட்ட சோயாவில் 50 வீதம் தரம் மிகுந்த புரதமும் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, ஊட்டச்சத்து 'பி' போன்றவையும் நிறைந்துள்ளது. சோயா புரதத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் சோயாவிற்கு தனி மவுசு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோயா புரதம் அதிக செரிமானமாகும் தன்மையுடையது. மொத்த சோயா உற்பத்தியில் 85 சதம் எண்ணெய் மற்றும் எண்ணெய்சத்து நீக்கப்பட்ட மாவு தயாரிக்கவும், 10 சதம் விதை பயன்பாட்டிற்கும் 5 வீதம் மட்டுமே நேரடியாக உணவு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ரால் மற்றும் குறைந்த அடர்வுடைய கொழுப்புப் புரதங்களின் அளவை கூட்டுவதன் மூலம் இதய சம்மந்தமான நோய்களை தடுக்க உதவுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
TN Weather: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
TN Weather: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க! இன்று இரவு 5 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை அப்டேட்..
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
Good bad ugly: அஜித் படத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பு நிறுவனம்! என்னய்யா சொல்றீங்க?
Good bad ugly: அஜித் படத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பு நிறுவனம்! என்னய்யா சொல்றீங்க?
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Embed widget