Maaveeran: வெள்ளை வேஷ்டி சட்டையில் வில்லனாக மிரட்டும் இயக்குநர் மிஷ்கின்.. மாவீரன் கேரக்டர்கள் யார்?
Maaveeran: மாவீரன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் ஸ்டில்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன

மாவீரன் படத்தில் நடிகர் மிஷ்கின் மற்றும் சரிதா ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் அடுத்தப் படம் மாவீரன். சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் , சரிதா, மிஷ்கின், மற்றும் யோகிபாபு ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகியிருந்த நிலையில் அண்மையில் வண்ணாரப்பேட்டையிலே என்கிற பாடல் வெளியாகி இருந்தது. சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் ஆகியவர்கள் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஜூலை 14-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தில் மிஷ்கின் மற்றும் சரிதா ஆகியவர்கள் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
மிஷ்கின்
அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் இயக்குநர் மிஷ்கின் . லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிஷ்கின். மேலும் மாவீரன் திரைப்படத்தில் படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். வெள்ளை வேஷ்டி சட்டையில் அவரது கெட் அப் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு அரசியல்வாதியாக இந்தப் படத்தில் நடித்துள்ளாராம் மிஷ்கின்.
சரிதா
அக்னி சாட்சி, , நெற்றிக்கண், ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சரிதா. வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில் பூக்கட்டிக் கொண்டு சிவகார்த்திகேயன் உடன் சிரித்துக்கொண்டிருக்கும் தோற்றமளிக்கிறார் சரிதா.
அதிதி சங்கர்
விருமன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதிதி சங்கர். கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் மிக இயல்பான நடிப்பில் அனைவரது மனதையும் கவர்ந்திருந்தார் அதிதி. தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
யோகிபாபு
நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் காம்போ நாம் அதிகம் பார்க்காதது. ஏற்கனவே காக்கி சட்டை, மற்றும் ரெமோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் கதாநாயகனின் நண்பனாக யோகி பாபு இருந்தார் என்றால் எப்படி இருக்கும் என்பதை நாம் மாவீரன் படத்தில் தெரிந்துகொள்ளலாம். இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. மேலும் மண்டேலா திரைப்படத்தில் மடோன் அஸ்வினின் கதாநாயகனாக நடித்தவர் யோகி பாபு. இந்தப் படத்தில் நிச்சயம் அவருக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு கதாபாத்திரன் நிச்சயம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

