மேலும் அறிய
Advertisement
Jyothika Surya : பெரிய இயக்குநர்கள் இந்த வேலையை பண்றாங்க.. பரபரப்பு பேட்டியளித்த ஜோதிகா..
தமிழ் சினிமாவில் அப்படி இல்லை என்பதே வருத்தம். பெரிய பெரிய இயக்குநர்கள் பெண்களுக்கு மட்டும் சான்ஸ் கொடுப்பதில்லை..
மிகப்பெரிய இயக்குநர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை எடுப்பதில்லை என நடிகை ஜோதிகா மனம் வருந்தி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா மலையாள ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்துள்ளார். முதன் முதலில் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து ஜோதிகா நடித்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. தன்பாலின கணவனுக்கு விவாகரத்து கொடுக்கும் ரோலில் நடித்த ஜோதிகா ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு ஜோதிகா அளித்துள்ள நேர்க்காணலில், தமிழ் சினிமா குறித்து பலவற்றை பகிர்ந்து கொண்டார்.
அதில், “நான் செய்த பெரும்பலான கேரக்டர்கள் மிகவும் பிடித்தது. நான் நடித்ததிலேயே 36 வயதினிலே, ராட்சசி, மொழி உள்ளிட்ட படங்கள் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். சினிமாவில் பெண்கள் பாத்திரங்களுக்கு அதிகமாக உழைத்து நடிக்கின்றேன். ஆனால் ரசிகர்களை அது கவரவில்லை என்றால் அனைத்தும் வீணாகிறது. ஹீரோவை விட ஹீரோயின் 10 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை ரசிகர்களும் விரும்ப வேண்டும். அதுக்கு ஏற்றார்போல வாய்ப்புகளும் வழங்க வேண்டும். பெரிய ஹீரோக்களை மட்டுமே உயர்த்தி பிடித்தால் பெண்கள் எப்படி மேலே வர முடியும்?
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவுக்கு வந்த புது இயக்குநர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர். ஆனால், மிகப்பெரிய இயக்குநர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தை மட்டுமே எடுக்கின்றனர். இந்தி, மலையாளம் சினிமாக்களில் பெரிய இயக்குநர்கள் பெண்களை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ளனர். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி இல்லை என்பதே வருத்தம். பெரிய பெரிய இயக்குநர்கள் பெண்களுக்கு மட்டும் சான்ஸ் கொடுப்பதில்லை.
நான் சினிமாவுக்கு 17 வயதிலேயே வந்துவிட்டேன். நிறைய காசு சம்பாதிக்கனும், பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது அதிர்ஷ்டம் நல்ல படங்கள் வந்து என்னை தூக்கி விட்டது. திருமணத்திற்கு பிறகு தான் நான் தமிழ் பேச பழகிட்டேன். சினிமாவில் மனப்பாடம் செய்துதான் தமிழ் பேசினேன். திருமணம் செய்ததும், குழந்தைக்கு நாங்கள் திட்டமிட்டதால் நடிப்பதற்கு பிரேக் கொடுத்தேன். எனது பசங்க கொஞ்சம் கொஞ்சம் வளரும் போது ஒருசில படங்களை மட்டும் செலக்டிவாக நடித்தேன்.
எனக்கு சினிமாவை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கு. என் குழந்தைகளா, சினிமாவா என்றால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். ரசிகர்களுக்கு என்மேல் பாசம் இருந்தா தமிழ்நாடு மருமகள் என்பார்கள்..கோவம் வந்தா இந்திக்காரி என்பார்கள். சோஷியல் மீடியாவில் என்னை குஷி ஜோதிகா என்பார்கள் சிலர், என்னை குயின் என்றும், ஒருசிலர் என்னை கிழவி என்றும் கூறுவார்கள். இப்படி இருந்தால் நான் யாரு..? அதனால் இதை எல்லாம் பற்றி கவலைப்பட மாட்டேன்.
நிஜ வாழ்க்கைக்கும், சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்கள் வேலை செய்து கொண்டு குடும்பத்தை பார்த்து கொள்வது வித்தியாசமான ரோல். ஆனால், சினிமாவில் அது முழுவதுமாக கூறப்படுவதில்லை” என்றார். கடைசியாக நெகட்டிவ் ரோல்ஸ் வந்தாலும் நடிப்பேன். எப்பொழுதும் போல ஒரே கதை இல்லாமல் இருந்தால் எனது சினிமா கரியரும் பெரிதாக வளரும்” என்றார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion