Maaveeran Box Office Collection: மாஸ் காட்டிய மாவீரன்.. தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி கோலிவுட் பிரபலங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி கோலிவுட் பிரபலங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனைவரும் விரும்பும் ஹீரோ சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனமே மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தையும் தயாரித்துள்ளது. நேற்று உலகமெங்கும் ரிலீஸான மாவீரன் படத்தை, ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் கலகலப்பாகவும், இரண்டாம் பாதி கமர்ஷியலாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக யோகிபாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு பெருமளவில் உதவியுள்ளது.
மாவீரன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
முன்னதாக மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மாவீரன் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தைப் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியான நிலையில், நேற்று மாலை முதல் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகவே உள்ளது.
இப்படியான நிலையில் மாவீரன் படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் முதல் நாளில் தமிழில் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாகவும், மற்ற மொழிகளையும் சேர்த்து ரூ.10 கோடி வசூல் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு வெளியான படங்களின் முதல் நாள் வசூலில் மாவீரன் படம் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மாவீரன் படத்தில் சிவகார்த்தியேகன் காமிக்ஸ் வரைபட கலைஞராக வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை சரிதா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Maaveeran Superb One 💥#Sivakarthikeyan and #Yogibabu Performance🔥😂 Good Music#MadonneAshwin 💪👏 #VijaySethupathi Voice 👍#VeerameJeyam pic.twitter.com/Z8XXSGBnAD
— Goushik12 (@Goushik1208) July 15, 2023