Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
Syria War Explained: சிரியா உள்நாட்டு போரால் சுமார் 1.5 கோடி மக்கள் சொந்த வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் இருந்த பெரும்பாலான இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும், நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவித்துவிட்டன.
சிரியாவில் திடீரென நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் எழுந்து ஆட்சியை கவிழ்த்து விட்டன. அதிபர் ஆசாத்தும் நாட்டைவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டார். சிரியாவில் என்னதான் நடக்கிறது? யார் இதற்கு காரணம் என பார்ப்போம்.
அழகான சிரியா:
சிரியா நில அமைப்பானது, கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் லெபனான், துருக்கி, ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அழகிய நிலப்பகுதி.
இரண்டாம் உலகப் போரில் ஒட்டமன் பேரரசு பேரரசு வீழ்ச்சியை சந்திக்கிறது. பின்னர், பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் சிரியா வந்தது. பின்னர். 1946 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு சிரியா மாறுகிறது. ஆனாலும் இதையடுத்தும், ராணுவ ஆட்சி உள்ளிட்ட பல குழப்பங்களே நீடித்து வந்தது.
ஹஃபேஸ் ஆசாத் ஆட்சி:
1971 ஆம் ஆண்டு முதல் ஹஃபேஸ் ஆசாத் ஆட்சி பொறுப்பேற்கிறார். இவர் இஸ்லாம் மதத்தின் சியா பிரிவை சேர்ந்தவர். ஆனால், சிரியாவில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர் மக்களுக்கு எதிரான ஆட்சியை மேற்கொண்டதால், மக்களும் இவர் மீது நாளடைவில் கோபம் கொள்ள ஆரம்பித்தனர். இவரது, கொடுங்கோன்மை ஆட்சியில், எதிர்ப்பு தெரிவித்த மக்களை ஒடுக்கி ஆட்சி செய்து வந்தார்.
பசார் அல் ஆசாத் ஆட்சி:
இதையடுத்து, 2000 ஆம் ஆண்டில், ஹஃபேஸ் ஆசாத் மறைவையடுத்து 2001 ஆம் ஆண்டு, இவரது 2வது மகன் , பசார் அல் ஆசாத் ஆட்சி பொறுப்பேற்கிறார். இவரும், மக்களை ஆயுதங்களால் ஒடுக்கி ஆட்சி செய்து வந்தார். தனக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக ரசாயன வாயு அடிப்படையிலான ஆயுதங்களை கூட பயன்படுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.
படம்: பசார் அல் ஆசாத்
2010 -11 ஜனநாயக எழுச்சி:
இந்த தருணத்தில் 2010-11 ஆண்டுகளில் அராப் ஸ்பிரிங் ( அரபு நாடுகளில் ஜனநாயக எழுச்சி ) வருகிறது. அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் மக்களாட்சி ஏற்படுத்த வேண்டும் என, கிளர்ச்சி ஏற்படுகிறது. இதனால் துனிசியா, எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. ஆனால், சிரியாவில் எழுந்த புரட்சியானது, பசார் அல் ஆசாத் நசுக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்கள்:
இந்நிலையில், பசார் அல் ஆசாத்திற்கு எதிராக பல கிளர்ச்சி குழுக்கள் உருவாக ஆரம்பித்தன. சிரியாவில் முக்கிய கிளச்ர்ச்சியாளர்களாக ஹ்ச். டி.எஸ் என்கிற ஆயுத குழு துருக்கி நாட்டால் ஆதரவு அளிக்கப்படுகிறது.
எஸ்.டி.எஃப் என்கிற கிளர்ச்சி குழுவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பல உள்நாட்டு கிளர்ச்சியாளர்களும் , கிளர்ச்சியில் ஈடுபட்டன.
ஏன் திடீர் கிளர்ச்சி:
பல வருடங்களாக, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என அவ்வப்போது சில கிளர்ச்சி குழுக்கள் போரில் ஈடுபட்டு வந்தாலும், திடீரென உள்நாட்டு போர் உருவாகி சில நாட்களிலேயே, சிரியா முழுவதுமே கைப்பற்றிவிட்டன.
பல வருடங்களாக , கிளர்ச்சியாளர்கள் ஒடுக்கப்பட்டு வந்தாலும், ஒரு வாரத்தில் சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ரஷ்யா யுக்ரைன் போர்:
இதற்கு காரணம், ரஷ்யா- ஈரான் ஆகிய நாடுகளின் பங்கு முக்கியமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதாவது, சிரியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களையும் படைகளையும் தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஈரான் வழங்கி வந்தன. யுக்ரைன் உடனான போரால், படைகளையும், கவனத்தையும் ரஷ்யா , யுக்ரைன் பக்கத்திற்கு திருப்பிவிட்டது. அதேபோன்று, இஸ்ரேல் உடனான போரில் ஈரானும் கவனத்தை, அங்கு செலுத்தியது.
இந்நிலையில், இதுதான் சரியான தருணம் என்று, கிளர்ச்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து சிரியாவை எளிதாக கைப்பற்றி விட்டனர். இந்த தருணத்தில் , அதிபராக இருந்த பசார் அல் ஆசாத், ரஷ்யாவிற்கு தப்பித்து சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
3.5 லட்சம் மக்கள் இறப்பு
சிரியாவில் , இத்தனை காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போரால், 60 லட்சம் மக்கள் அகதிளாகவும் என மொத்தம் 1.5 கோடி மக்கள் சொந்த வீடுகளை விட்டு தள்ளி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், பல ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போரால் சுமார் 3.5 லட்சம் மக்கள் இறந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
”அச்சுறுத்தல் தர மாட்டோம் “
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் சிரியா நாட்டை கைப்பற்றிய நிலையில், ஹச்.டி .எஸ் கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல் சாரா ( அபு முகமது அல் ஜோலானி ) தெரிவித்ததாவது, தங்களால் அண்டை நாடுகளுக்கு, அச்சுறுத்தல் இல்லை. "ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். இவையெல்லாம், முந்தைய ஆட்சியை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களையும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டவர்களையும் ஒரே மாதிரியாக பார்க்க கூடாது.
படம்: ஹச்.டி .எஸ் தலைவர் அகமது அல் சாரா ( அபு முகமது அல் ஜோலானி )
நாங்கள் பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை எடுக்க உள்ளோம். எங்கள் அமைப்பை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் பேசியிருக்கிறார்.
இனி வரும் காலங்களிலேயே, சிரியா அரசமைப்பு எப்படி இருக்கும்? மக்களாட்சி முறை வருமா? நாட்டைவிட்டு அகதிகளாக சென்ற மக்கள் திரும்பி வருவார்களா ? என்பது வரும் காலங்களிலேயே தெரியவரும்.