National Film Awards: கெத்து காட்டிய அசுரன்: இயக்குனர் வெற்றிமாறன்... தயாரிப்பாளர் தாணு தேசிய விருது பெற்றனர்!
67th National Film Awards 2021: அசுரன் படத்துக்காக தேசிய விருதை அதன் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் வெற்றிமாறனும் பெற்றனர்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழில் இருந்து சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த படமாக அசுரனும், சிறந்த இசையமைப்பாளராக இமானும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக கே.டி. என்ற கருப்புதுரையில் நடித்த நாகவிஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், சிறப்பு ஜூரி விருதுக்கு பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதனையடுத்து விருது வழங்கும் விழா இன்று நடந்தது. அப்போது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் வெற்றிமாறனும் விருதுகளை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார்.
சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது - அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டதுhttps://t.co/wupaoCQKa2 | #NationalFilmAwards | #Dhanush | #Asuran | #VetriMaaran | @dhanushkraja pic.twitter.com/spRFZoA3MT
— ABP Nadu (@abpnadu) October 25, 2021
வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இரண்டாவது முறையாகும். அசுரன் படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: National Film Awards: ‛எதிர்பார்ப்பு இல்லாமல் நடித்தேன்...’ தேசிய விருது பெற வந்த விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!
’நான் கர்ப்பமாக இருக்கிறேனா?’ - தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிபாஷா பாசு
Biggboss Tamil 5 | வெளியேற்றப்பட்டார் அபிஷேக்.. ப்ரியங்கா-நிரூப் காம்போ உடைகிறதா?
"நம்பிக்கையோடு தடைகளை கடந்து வர வேண்டும்" - ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த தென்காசி மாணவி!