மேலும் அறிய

Biggboss Tamil 5 | வெளியேற்றப்பட்டார் அபிஷேக்.. ப்ரியங்கா-நிரூப் காம்போ உடைகிறதா?

ப்ரியங்காவும், அபிஷேக்கும் நாமினேஷன் டென்ஷனில் உட்கார்ந்திருக்கும்போது நிரூப் தன்னை சேஃப் ஸோனில் நிலைநிறுத்துவதையே குறியாகக் கொண்டிருந்தார்.

அபிஷேக் வெளியேற்றப்பட்டார். ப்ரியங்காவுக்கும் நிரூப்புக்கும் இடையில் நாணயத்தைக் குறித்த ஒரு பூகம்பம் வெடித்தது. நாமினேஷன் டென்ஷனில் இருந்ததால் அதை அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டார் ப்ரியங்கா

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

அபிஷேக் போவதற்கு முன்பு அதைத் தடுத்து நிறுத்த நிரூப்பும், பாவனியும் அதிகமாக முயற்சி செய்தார்கள். பிக்பாஸ் இந்த முறை அந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியாது என சொல்லிவிட்டார். ப்ரியங்காவால் எதையும் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. இந்த பிக்பாஸுக்கு போகாதன்னு அப்போவே என் நண்பர்கள் எல்லாரும் சொன்னாங்க என வெளிப்படையாகவே புலம்பினார்.

கோபப்படுத்தினாலும், மாற்றி மாற்றி பேசினாலும் அபிஷேக் தவிர்க்க முடியாத போட்டியாளராக இருந்தார் என்பது உண்மை.

நேற்றைய எபிசோட் இது..

வரும்போது பீடிகையோடு வந்த கமல், நிறைய மாத்தி மாத்தி பேசுறாங்க. நீங்களே அவங்களுக்கு பதில் சொல்லிடுங்க என்றார். நாணயம் எடுப்பதற்கு தாமரைச்செல்வியையும், சின்னப்பொண்ணுவையும் வைத்து விளையாடியதைப் பற்றி கேள்வி கேட்டார் கமல். உங்களுக்காக யாருமே விளையாடவில்லையா என சர்காஸம் பண்ணார்? சர்க்கரை கொஞ்சம் கம்மியா செலவு பண்ணுங்க என அண்ணாச்சி சொன்னதும், சரக்கென ப்ரியங்காவும், அபிஷேக்கும் அவர்மீது பாய்ந்தார்கள். மெதுவா பேசு என சொன்ன ராஜுவையும் புரட்டி எடுத்தார் அபிஷேக்.

“நான் ரொம்ப சாதாரணமா சொன்னது உங்களைக் காயப்படுத்தி இருந்தா, மன்னிப்பு கேக்குறேன்” என சொன்னதும், எல்லோரும் அவரை சமாதானப்படுத்தினார்கள். தாமரையைக் காப்பாற்றி பஞ்சதந்திரம் கேமில் தியாகியாக பார்த்தீர்களா என எல்லாரையும் கமல் கேட்டதும், தியாகி ஆகணும்னா அதுக்கு தனி ஸ்ட்ராட்டஜி இருந்திருக்கும் என கமலுக்கே டஃப் கொடுத்தார் அபிஷேக். பாவம் அபிஷேக், தன் நிலைமை என்னவென தெரியாமல் வாயாடிக்கொண்டிருந்தார். "இங்க யாருமே வீக், ஸ்ட்ராங் கண்டென்ஸ்டென்ஸ் இல்ல. threat, Non threat தான் கேமே இருக்கு” என்றார். அப்படி சொல்றீங்களா? அப்படின்னா யார் அந்த ஜோன்ல இருக்காங்க எனக் கேட்டதும், “இப்போ குழந்தைங்களுக்கு டாச்க் வெச்சா இமான் அண்ணாச்சிதான் ஜெயிப்பாரு” என்றார். கமல், குழந்தைங்கன்னு சொன்னதால கேக்குறேன்.

குழந்தைங்களை கூட்டிட்டு வந்துட்டாங்கப்பா என சொன்னீர்களே என்றார். வழக்கம்போல அபிஷேக் சமாளித்தார். ராஜூ மோகனின் விளையாட்டை பாராட்டினார் கமல்.மதுவுக்கு ஸ்லிப் எழுதிக்கொடுத்த அக்‌ஷராவை நறுக்கென கேள்வி கேட்டார் கமல்ஹாசன். அதை விமர்சிக்க ப்ரியங்காவுக்கும் குறும்படம் போடாமலே குட்டு வைத்தார். சின்னப்பொண்ணுவை உடலைத்தடவி சோதனை செய்தது உங்களுக்கு சங்கடமாக இல்லையா என ப்ரியங்காவைக் கேள்வி கேட்டார் கமல். அதற்கு விளையாட்டுதானே, எல்லாரையும் கேட்டுவிட்டுத்தான் செய்தேன் என சப்பைக்கட்டு கட்டினார். ”கனடாவில் தான் சோதிக்கப்பட்டதாக சொன்ன கமல், பெயரும் தனக்கு வித்தியாசமாக இருந்து, தாடியும் வைத்திருந்ததால் தன்னை வேறு விதமாக சோதனை செய்தார்கள்” என்றார். ”என் படத்திலேயே காட்சிகள் வைத்திருப்பதால், அது எனக்கு நன்றாக தெரியும். இந்த சோதனைகள் காயப்படுத்தும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget