’நான் கர்ப்பமாக இருக்கிறேனா?’ - தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிபாஷா பாசு
கடைசியாக 2019ல் டேஞ்சரஸ் என்னும் வெப் சீரிஸில் நடித்த பிபாஷா அதன் பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருப்பதும் இந்த சர்ச்சைக்கு வலுசேர்த்துள்ளது
பாலிவுட்டில் ஃபிட் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் பிபாஷா. 42 வயதாகும் பிபாஷா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து எழுந்து வரும் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிபாஷா பாசு. நடிகர் பிபாஷா பாசு சக நடிகர் கரண் சிங் க்ரோவரை சில காலம் டேட்டிங் செய்ததற்குப் பிறகு 2016ல் திருமணம் செய்துகொண்டார். அதற்கு முன்பு நீண்டகாலம் நடிகர் ஜான் ஆபிரகாமைக் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. இதையடுத்துதான் கரணை மணந்தார் பிபாஷா. இதற்கிடையே தான் கருவூற்றிருப்பதாகவும் விரைவில் குழந்தை பெற இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் பரவிவருவதை அடுத்து இல்லை என்று அதற்கு பதில் அளித்துள்ளார் பிபாஷா.
View this post on Instagram
மேலும் உடல் எடை கூடினால் கருவூற்றிப்பதாக நினைப்பது தவறு என்றும் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். கடைசியாக 2019ல் டேஞ்சரஸ் என்னும் வெப் சீரிஸில் நடித்த பிபாஷா அதன் பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருப்பதும் இந்த சர்ச்சைக்கு வலுசேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிபாஷா, ‘நான் கருவூற்றிப்பதாக செய்தியை பரப்புபவர்கள் என் மீதான நல்ல எண்ணத்தில்தான் அதனைப் பகிர்கிறார்கள்.ஆனால் நான் உடல் எடை கூடியிருப்பதை காரணம் காட்டி அவ்வாறு சொல்வது தவறு. நான் எனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவள். அவர்களுக்காக அவர்களோடு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அதனால்தான் சிலகாலமாகப் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. நான் எனக்காக சிலகாலம் வாழ நினைக்கிறேன்.அதனால் உடல் எடை கூடியிருக்கிறது. உடல் எடை கூடுவதில் ஒன்றும் தவறில்லையே’ என பதிலடி கொடுத்துள்ளார்.
பாலிவுட்டின் ஃபிட்னெஸ் மாடல்களில் ஒருவராகக் கருதப்படும் பிபாஷா உடல் எடை கூடியிருப்பதால்தான் அவரது மார்க்கெட் சரிந்துவிட்டதாக பாலிவூட்டில் தகவல் உலவிவருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பிபாஷாவும் கரண் க்ரோவரும் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிவருகின்றனர்.