மேலும் அறிய
Advertisement
வீட்டில் கஞ்சா செடி வளர்த்து போதையாகிய கணவன்; அடித்து துன்புறுத்தியதால் காட்டிக்கொடுத்த மனைவி
வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து அவ்வப்போது போதையாகிய கணவன். அடித்து துன்புறுத்தியதால் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவன் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பூந்தொட்டி மற்றும் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து அவ்வப்போது போதையாகிய கணவன் அடித்து துன்புறுத்தியதால் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்த பெதராஜ் என்பவரின் மகன் சிவபிரசாத் (36) என்பவர் ஆந்திர மாநிலம் ராஜ் மன்றி பகுதியை சேர்ந்த ஜான்சி என்றவரை பத்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் நான்கு வருடங்களுக் முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஏலகிரி மலையில் தனியார் ஒட்டலில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் ஏலகிரி மலையில் இருந்து குடிபெயர்ந்து தற்போது ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் வீடு வாடகை எடுத்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சிவப்பிரசாந் கஞ்சாவுக்கு அடிமை என தெரிகிறது. இதனால் கஞ்சா குடித்துவிட்டு அவ்வப்போது தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது வீட்டில் படியில் பூந்தொட்டியில் கஞ்ச செடி வளர்த்து வந்துள்ளார். கஞ்சா கிடைக்காத நிலையில் இந்த கஞ்சா செடிகளை பயன்படுத்தி அவ்வப்போது போதைக்கு அடிமையாகி உள்ளார்.
இதன் காரணமாக கணவனின் துன்புறுத்தல் அதிகமாக தனது மனைவியே ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தனது கணவன் கஞ்சா செடி வளர்த்து வருவதாகவும் மேலும் இந்த கஞ்சா செடிகளை பறித்து அவ்வப்போது பயன்படுத்தி போதை தலைக்கேறிய பின் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் புகார் அளித்தார்.
இதன் காரணமாக சிவபிரசாத்தின் வீட்டிற்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார் வீட்டில் வளர்த்து வந்த இரண்டு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சிவபிரசாத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காசு கொடுத்து கஞ்சா வாங்காமல் வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்து வந்து அதனை பயன்படுத்தி போதை ஆகி வந்ததும் இதன் காரணமாக மனைவிக்கு கொடுத்த துன்புறுத்தலால் மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்து கணவனை மாட்டிவிட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion