மேலும் அறிய

ஊராட்சி மன்ற தலைவரை போட்டு தள்ள தயாரான குட்டி தாதாக்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பி.பி.ஜி.டி சங்கர்
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் பி.பி.ஜி.டி சங்கர்.  சங்கர் மீது ஸ்ரீபெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
ஊராட்சி மன்ற தலைவரை போட்டு தள்ள தயாரான குட்டி தாதாக்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை..
இவர் 2004–ம் ஆண்டுக்கு முன்பு வரை, அப்பொழுது பிரபல ரவுடியாக இவருடைய  அண்ணன் பி.பி.ஜி.குமரனுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்தார். அப்பொழுது ரவுடியாக குமாரன் செய்த அனைத்து சமூகவிரோத செயல்களிலும் பங்கு பெற்றார் எனக் கருதப்படுகிறது . பி.பி.ஜி.டி சங்கர் மீது 15 வழக்குகள் பதியப்பட்டுள்ள , மூன்று குற்றப்பத்திரிகையும் தமிழக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 6 நபர்களை காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
ஊராட்சி மன்ற தலைவரை போட்டு தள்ள தயாரான குட்டி தாதாக்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை..

சதி திட்டம்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று. இரவில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கரோந்து பணிகள் நடைபெற்று. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே, மரங்கள் நிறைந்த தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 4, 5 பேர் நின்று இருந்ததை, ரோந்து பணியில் சென்ற காவலர்கள் பார்த்து உள்ளனர்.
 
ஊராட்சி மன்ற தலைவரை போட்டு தள்ள தயாரான குட்டி தாதாக்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை..
 
உடனடியாக சம்பவ இடத்தில் விரைந்து சோதனை செய்ததில் வளர்புரம் பகுதியைச் சேர்ந்த விஜய் ( 27 ), என்ற நபரை கைது செய்தனர். கைதான விஜய் கொடுத்த தகவலின் அடிப்படையில் வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ஷங்கரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர்  ஸ்ரீபெரும்புதூர் வளர்புறம் பகுதியை சேர்ந்த  கைப்புள்ள ( எ ) ஞானபிரசாத் ( 21 ),   சுரேஷ் ( எ ) குயிக் சுரேஷ்  ( 25 ), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ்   ( 24 )  ,  அன்பு ( எ ) அன்பரசன் ,  டேவிட் ( எ ) டேவிட்சன் ( 25 ),  ஆகிய 6 நபர்களையும் இருங்காட்டுகோட்டை அருகே கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி மன்ற தலைவரை போட்டு தள்ள தயாரான குட்டி தாதாக்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை..
காஞ்சிபுரம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்
 
மேலும் விசாரணையில் கைப்புள்ள ( எ ) ஞானபிரசாத், நாகராஜ் மற்றும் சுரேஷ் ( எ ) குயிக் சுரேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே, திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6 நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்த காவல் ஆய்வாளர்  மற்றும்  காவல் அதிகாரிகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் M.சுதாகர் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ghibli Art: அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:  Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka Aasai

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ghibli Art: அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
Embed widget