மேலும் அறிய
Crime: கொடூரம் மனம் படைத்த மாமியார், கணவன் - கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கழுத்து நெறித்து கொலை. தூக்கிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன், மாமியார் கைது

கைது செய்யப்பட்ட மகன், தாய்
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமரம்பேடு கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து லோகப்பிரியா சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மணிமங்கலம் காவல் உதவி ஆணையாளர் ரவி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் லோக பிரியாவின் கணவர் கோகுலகண்ணன் மற்றும் மாமியார் ராஜேஸ்வரி (61) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், வரதட்சணை காரணமாக லோகப்பிரியாவை கழுத்தை நெறித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க லோகப்பிரியாவின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கபட்டனர். வரதட்சனை கேட்டு தர மறுத்ததால் மனைவியை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion