துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Cooker Murder : கணவனே மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

ஹைதராபாத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட தகராறில் மனைவியை கொன்று குக்கரில் வேகவைத்தை சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மீர்பெட் நகரை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரரான குருமூர்த்தி, இவரின் மனைவி மாதவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் கடந்த 18ஆம் தேதி வாக்குவாதம் ஏற்ப்பட்ட நிலையில் மாதவி மாயமாகியுள்ளார்.
காவல்துறை விசாரணை:
இந்த நிலையில் மாதவியின் பெற்றோர் தனது மகளை ஒரு வாரமாக காணவில்லை என்று போலீசிஸ் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். கணவர் குருமூர்த்தியிடம் விசாரணை மேற்க்கொண்ட போது முன்னுக்கு முரணான பதிலை அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரித்துள்ளனர்.
உண்மையை ஒப்புக்கொண்ட குருமூர்த்தி:
இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் மனைவியை கொன்றதை கணவர் குருமூர்த்தி ஓப்புக்கொண்டார். சம்பவத்தன்று கணவன் - மனைவி இருவருக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குருமூர்த்தி மனைவியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் நடந்ததை உணர்ந்த அவர் மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார். மூன்று நாட்கள் வரை வேகவைத்து அதன் பின்னர் உடல் பாகங்களை சாக்கு பையில் போட்டு அருகில் இருக்கும் ஏரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
அவரின் வாக்குமூலத்தை கேட்ட காவலதுறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏரியில் வீசப்பட்ட மாதவியின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
கணவனே மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து குக்கரில் வேக வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

