abp live

கவரிங் நகைகள் புதிதுபோல் பளிச்சிட சில டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

தங்கத்திற்கு மாற்றாக நாம் உபயோ கிக்கும் கவரிங் நகைகள் எளிதில் கறுத்துப் போகும் தன்மை கொண் டவை.

abp live

இந்த நகைகளை வீட்டில் உள்ள எலுமிச்சம்பழம் மற்றும் மஞ்சள் ஆகிய வற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து, புதிய நகை போல பளிச்சிட வைக்க முடியும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

abp live

ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை இரண் டாக வெட்டி அதில் இருக்கும் சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். கறுத்து போன நகையை அந்த சாற்றில் ஊறவைக்க வேண்டும்.

abp live

நகை முழுவதும் எலுமிச்சம் பழச்சாறு படும்படி டீஸ்பூனை பயன்படுத்தி திருப்பி விடுங்கள். 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

abp live

ஊறிய பிறகு நகைகளில் இருக்கும் அழுக்குகள், தூசுகள் அனைத்தும் எலுமிச்சம் பழச்சாற்றில் இறங்கிவிடும். அதன் பிறகு நகையை எடுத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதே எலுமிச்சை சாற்றை வடிகட்டிய பின் அதில் ஊற்ற வேண்டும்.

abp live

பின்னர் அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும். லேசாக சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். இவ்வாறு செய்வதால் மீதம் இருக்கும் அழுக்குகளும் நகையில் இருந்து முழுமையாக நீங்கி விடும்.

abp live

அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் பொடியை அந்த நகை முழுவதும் பூச வேண்டும்.ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நகையை சாதாரண தண்ணீரில் கழுவி சுத்த மான பருத்தித் துணியை பயன்படுத்தி ஈரமில்லாமல் நன்றாகத் துடைக்கவும்.

abp live

நகையின் மீது முகத்திற்கு உபயோகிக்கும் டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடரைத் தூவி உலர்ந்த பின்பு நன்றாகத் துடைத்து எடுக்கவும்

abp live

இப்போது உங்கள் கவரிங் நகை பளிச்சென்று புதிது போல மின்னுவதைப் பார்க்க முடியும்.